Versuchen GOLD - Frei
பனிப் பாலைவனம்
Dinamani Tirunelveli
|October 05, 2025
சஹாரா, தார் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறோம். பனிப் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் அது எங்குள்ளது தெரியுமா?
ஒவ்வொரு பயணியின் வாழ்நாள் கனவாக இருக்கும் 'ஸ்பிட்டி' பள்ளத்தாக்குதான் இந்தியாவின் பனிப் பாலைவனம். 'ஸ்பிட்டி' என்பது திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நிலத்தைக் குறிக்கிறது. ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பழமை, தூய்மை மாறாத பனிச்சொர்க்கம். இமய மலையில் பதிக்கப்பட்டிருக்கும் வைரம்தான் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு. வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளில் பயணிக்கும்போது, தரிசாக இருக்கும் மலைச் சிகரங்கள், செதுக்கப்பட்டது போல் தோற்றம் தரும் பாறைகளைக் காணலாம்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 12,500 அடி உயரத்தில் ஸ்பிட்டி அமைந்துள்ளது. லாமாக்கள் வாழும் ஸ்பிட்டியின் கவர்ச்சிகரமான ஈர்ப்பு, அங்குள்ள புத்த மடாலயங்கள்தான்! அதன் சுவர்களை வண்ண வண்ண பளீர் ஓவியங்கள், தங்காக்கள் (மத ஓவியங்கள்) அலங்கரிக்கின்றன. கருஞ்சிவப்பு நிற அங்கி அணிந்த லாமாக்கள் புனித மந்திரங்களை முணுமுணுத்தாலும் அவை எதிரொலிக்கும் அளவுக்கு ஆழ்ந்த அமைதி ஸ்பிட்டியை ஆளுகிறது.
ஸ்பிட்டி ஆன்மிக நாட்டம் கொண்டவர்களைக் கவர்ந்திருப்பது போல், சாகசத்தைத் தேடுபவர்களுக்கான தீனியையும் வழங்குகிறது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் வாகனங்களில் பயணங்களே சாகசமாகத்தான் அமையும். மலையேற்றம், முகாம்களில் தங்குதல், ஸ்பிட்டி ஆற்றின் குறுக்கே நதி ராஃப்டிங் சாகச விரும்பிகளை வரவேற்கின்றன.
Diese Geschichte stammt aus der October 05, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
இடதுசாரிகள் ஆதரவு அளிக்காதிருந்தால் தவெக அரசு பதவியேற்றிருக்காது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தகவல்
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?
முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்
தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Tirunelveli
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Tirunelveli
தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
June 24, 2026
Translate
Change font size
