Versuchen GOLD - Frei
பொறுப்புகளை ஏற்கும் அரசு தேவை
Dinamani Tirunelveli
|June 17, 2025
மக்களுக்கு தரமான வேலைவாய்ப்பு தேவை; இதற்கு ஒரு பொருத்தமான திட்டமிடுதல், நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள், அதற்கான வழிமுறைகள் தேவை. அனைத்தையும் தனது பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளும் அரசு தேவை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-26-ஆம் ஆண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இது ஜப்பானின் 4,186.431 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 586 மில்லியன் டாலர் (ரூ.5,011 கோடி) அதிகமாகும். இது இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றும், ஜப்பானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளும்.
இப்போதைய நிலையில் அமெரிக்கா (30.5 டிரில்லியன்), சீனா (19.2 டிரில்லியன்), ஜெர்மனி (4.74 டிரில்லியன்) ஆகியவை இந்தியாவைவிட உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.
நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த சாதனை குறித்துப் பேசியபோது இந்தியர்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது.
அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் என்னவென்றால், இந்தியா 2028-ஆம் ஆண்டில் 5.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்துக்கு உயரும்; ஜெர்மனியை முந்திச் செல்லும் என்பதாகும். இந்த முன்கணிப்புகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக ஏற்கெனவே உயர்ந்திருக்க வேண்டும் என்பது தான் உண்மை. மூன்றாவது, நான்காவது இடத்துக்கு போட்டியிடும் நாடாக இருந்திருக்கக் கூடாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை நாம் கொண்டிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் உலகின் செல்வத்திலும், வருவாயிலும் இந்தியா 18 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் உருவாக்கிய மகிழ்ச்சியிலேயே நிலை கொண்டுவிடாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது. ஏனெனில், உண்மை நிலவரத்தை நேர்மையாக ஒப்புக்கொள்வது நமது சரியான இடத்தை அடைவதற்கான பாதையை வடிவமைப்பதற்கு மிக அவசியம்.
இதற்காக நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் வளர்ச்சி தொடர்பாக நமக்கு கூறப்பட்டுள்ள எண்கள் சரியானதுதானா?; இரண்டாவதாக அவை சரியாக இருந்தால் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு இந்த வளர்ச்சி நமது நாட்டுக்கு போதுமானதா?; மூன்றாவதாக சமூகநீதியை எட்டுவதற்கு இந்த வளர்ச்சி மட்டும் போதுமானதா? என்பதாகும். இது தவிர நாட்டின் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு சிறப்பாக மேம்பட்டுள்ளது என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
Diese Geschichte stammt aus der June 17, 2025-Ausgabe von Dinamani Tirunelveli.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வென்றுவிட்டு, தார்மிக அடிப்படையில் வெளியில் இருந்து தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அதன் அமைச்சரவையில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்தது.
1 min
May 12, 2026
Dinamani Tirunelveli
கேரளம்: வாடகை வீட்டில் குடியேறிய பினராயி விஜயன்
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, மாநில பொறுப்பு முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறினார்.
1 min
May 12, 2026
Dinamani Tirunelveli
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Tirunelveli
முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
முதல்வர் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tirunelveli
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவுக்கு ரூ.476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு
இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tirunelveli
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tirunelveli
திமுக உறவை காங்கிரஸ் முறித்தது சரியானதல்ல: டி.ராஜா
தமிழகத்தில் தவெகவுக்கு ஆதரவளிப்பதற்காக திமுகவுடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டது சரியானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா கூறினார்.
1 min
May 12, 2026
Dinamani Tirunelveli
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Tirunelveli
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Translate
Change font size
