Facebook Pixel உரிமைப் போரில் பௌத்த நாடுகள்! | Dinamani Tiruchy – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

உரிமைப் போரில் பௌத்த நாடுகள்!

Dinamani Tiruchy

|

August 13, 2025

சர்வதேச நீதிமன்றம் 1962-இல் 'ப்ரே விஹார்' கோயிலை கம்போடியாவுக்கு வழங்கினாலும், அதன் சுற்றுப்புறப் பகுதி இன்னும் தாய்லாந்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே, பக்தர்களின் வருகை குறித்த சிக்கல்கள் தொடர் பதற்றத்துக்கு வழிவகுக்கின்றன.

- பினக் ரஞ்சன் சக்கரவர்த்தி

லகின் கண்கள் அனைத்தும் காஸா மீது படிந்திருக்க, நூற்றாண்டு கடந்த கம்போடியா-தாய்லாந்து எல்லைப் பிரச்னை திடீரென ராணுவ மோதலாக அண்மையில் வெடித்தது. பொருளாதார விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த ஆசியான் அமைப்பை இந்த மோதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டு பௌத்த நாடுகள் எல்லையில் மாறிமாறி குண்டு மழை பொழிந்ததற்கு, ஒரு மலை உச்சியில் அமைந்துள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'ப்ரே விஹார்' என்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னம் அந்தஸ்து பெற்ற ஹிந்து கோயிலின் உரிமைப் பிரச்னைதான் முக்கியக் காரணம் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தும் செய்தி.

மலேசிய பிரதமரின் தலையீட்டில், தாய்லாந்து-கம்போடிய பிரதமர்களுக்கு இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையால் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. முன்னதாக, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை தாய்லாந்து மறுத்திருந்தது. மலேசியாவின் சண்டை நிறுத்தத் திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தாய்லாந்து, பின்னர் தங்கள் ராணுவத்தின் அழுத்தம் காரணமாகவே அதிலிருந்து பின்வாங்கியதாக கம்போடியா குற்றஞ்சாட்டியது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் கம்போடியா உண்மையாக ஆர்வம் காட்டினால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பிறகே, சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாயின.

இந்த மோதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தைக் கூட்டியது. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளும் மத்தியஸ்தம் செய்ய முன் வந்தன. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்துக்கு உடன்படவில்லையெனில் வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என இரு நாடுகளுக்கும் தன் பாணியில் மிரட்டல் விடுத்தார்.

மேலும், 'இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் நான் ஆற்றிய பங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டு, தமது சமாதானத் தூதர் பாத்திரத்தை நிலைநாட்ட முயன்றார். எனினும், உக்ரைன் மற்றும் காஸா விவகாரங்களில் டிரம்ப் விடுத்த கெடுபிடிகள் தோல்வியைச் சந்தித்த நிலையில், அந்தப் பின்னடைவுகளை ஈடுசெய்யும் நோக்கில் அவர் எடுத்த முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy

Dinamani Tiruchy

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tiruchy

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size