Facebook Pixel கவலையளிக்கும் மக்கள்தொகை பெருக்கம்! | Dinamani Tiruchy – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

கவலையளிக்கும் மக்கள்தொகை பெருக்கம்!

Dinamani Tiruchy

|

July 11, 2025

இந்தியாவில் 1872-இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு முன்னோடியாக இருந்தது. 1881 முதல் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய நிர்வாகப் பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது

- உதயை மு. வீரையன்

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2023-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 802 கோடி என்று ஐ.நா. அமைப்பு அறிக்கை வெளியிட்டது.

1400-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிக விரைவான விகிதத்தில் உலக மக்கள்தொகை அதிகரிப்பு 1950-ஆம் ஆண்டுகளில் குறுகிய கால அளவிலும், அதன்பின்னர் 1960-1970-ஆம் ஆண்டுகளில் நீண்ட காலகட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஆண்டுக்கு 5.7 கோடி மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050-ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டுக்கு 9 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையை பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால், உலக மக்கள்தொகையானது 2050-ஆம் ஆண்டில் 800 கோடி முதல் 1,050 கோடி வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பால் புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவது பற்றி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும், அதனுடன் நிகழும் பயன்பாட்டு அதிகரிப்பும் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் முடிவாகும்.

2025-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 809 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு விநாடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும், 2 பேர் இறப்பார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியாக இருக்கும். ஆகவே, அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். அடுத்த நிலையில் சீனா 142 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். அமெரிக்கா 34 கோடியாகவும், ரஷியா 14 கோடியாகவும் இருக்கும். இந்த புள்ளிவிவரங்கள் ஐ.நா. சபையின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

உலகில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திய நாடு இந்தியாவாகும். 1872-ஆம் ஆண்டு வைஸ்ராய் லார்ட் மேயோவின் கீழ் இது தொடங்கப்பட்டது. மேலும், 1881 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruchy

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruchy

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Tiruchy

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size