கூட்டணி ஆட்சியா?, கூட்டணி அரசா?
Dinamani Tiruchy
|July 09, 2025
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி யிருக்கிறது.
சென்னை, ஜூலை 8: அதிமுகவின் மௌனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந்த விவாதத்தைத் தொடர்ந்து பேசுபொருளாக்கி இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் முறிந்த அதிமுக-பாஜக கூட்டணி, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அமித் ஷா தனது 'எக்ஸ்' பக்கத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனப் பதிவிட்டார். ஆட்சி அமையும் என்று சொன்னாரே தவிர, அரசு அமையும் என்று சொல்லவில்லை. அதற்குள், அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று அறிவித்துவிட்டார் என்று ஊடகங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய பிறகு அவருடன் சேர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
அடுத்த நாளே, அமித் ஷா கூறியது 'கூட்டணி ஆட்சிதான்', 'கூட்டணி அரசு அல்ல' என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். 2021-வரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்தது என்பதையும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில்தான் அமித் ஷா சில நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனத் தெரிவித்து, ஓயாத கூட்டணி ஆட்சி சர்ச்சைக்கு உயிர் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் இப்போதும் எடப்பாடி பழனிசாமியோ அவரது தரப்போ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாஜகவிலும் அதே நிலைதான்.
Diese Geschichte stammt aus der July 09, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Tiruchy
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 mins
January 03, 2026
Dinamani Tiruchy
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Tiruchy
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Tiruchy
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Tiruchy
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Tiruchy
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Tiruchy
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Tiruchy
ஜம்மு: சர்வதேச எல்லைப் பகுதியில் பிடிபட்ட வங்கதேச இளைஞர்
ஜம்மு அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
January 02, 2026
Dinamani Tiruchy
ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 02, 2026
Translate
Change font size
