Facebook Pixel தன்கர் ராஜிநாமா: எதிர்க்கட்சிகள் கேள்வி | Dinamani Tenkasi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

தன்கர் ராஜிநாமா: எதிர்க்கட்சிகள் கேள்வி

Dinamani Tenkasi

|

July 23, 2025

குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜகதீப் தன்கர் திடீரென ராஜிநாமா செய்தது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

புது தில்லி, ஜூலை 22:

இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜகதீப் தன்கர் (74), நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் (திங்கள்கிழமை), தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு அவர் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில், 'மருத்துவர்களின் ஆலோசனையின்படி, உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக குடியரசு துணைத்தலைவர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 67(ஏ) பிரிவின்கீழ், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதை மேற்கொண்டுள்ளேன்' என்று குறிப்பிட்டார்.

அறிவிக்கை வெளியீடு: ஜகதீப் தன்கர் ராஜிநாமா தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன் கையொப்பமிட்ட அந்த அறிவிக்கையில், 'பொது தகவலுக்காக குடியரசு துணைத் தலைவரின் ராஜிநாமா குறித்த தகவல் வெளியிடப்படுகிறது' என்று குறிப்பிட்டு, அவரின் ராஜிநாமா கடிதம் இடம்பெற்றுள்ளது.

மாநிலங்களவையில் தகவல்: முன்னதாக, இந்த அறிவிக்கை குறித்து மாநிலங்களவையில்தகவல் தெரிவிக்கப்பட்டது. கேள்வி நேரத்துக்காக மாநிலங்களவை பகல் 12 மணிக்கு கூடியபோது, இந்த அறிவிக்கை குறித்து அவையை வழிநடத்திய கன்ஷியாம் திவாரி உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

மாநிலங்களவையின் தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் இருப்பதால், இந்த அறிவிக்கை குறித்த தகவல் முறைப்படி அவை யில் தெரிவிக்கப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tenkasi

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size