Versuchen GOLD - Frei

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

Dinamani Salem

|

January 05, 2026

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

- ஆர். நடராஜன்

அதேநேரம் பணம் குறித்துக் கவலைப்படாமல் என்ன விலை கொடுத்தாலும் அந்தப் பொருளை டஜன் கணக்கில் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள் அரசியல்வாதிகள். பணம் என்னய்யா பணம், வாங்கிப் போடு எல்லாவற்றையும் என்பவர்கள் ஆளும்கட்சியினர். இதுதான் நம் ஜனநாயகத்தில் பதுங்கியுள்ள பண நாயகம்.மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது என்று கவலைப்படுகிறார்கள் வர்த்தகர்கள். அரசின் புள்ளிவிவரங்களோ பொய்களுக்கு உண்மை முலாம் பூசி பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறது.

சரி, மக்களிடம் புழங்காத பணம், மக்கள் வரியாகச் செலுத்தும் பணம், எங்குதான் போகிறது? 'நாங்கள் உங்கள் சேவகர்கள்' என்று கூறும் வெள்ளைச் சட்டைகளுக்குள் கருப்புப் பணமாக நிரம்பி வழிகிறது. அது ஆட்சி செய்வோரிடம் அடைக்கலம் புகுந்துவிட்டது என்பது உள்ளத்தைச் சுடும் உண்மை.

அந்தப் பணம் சில்லறைகளாகத் தேர்தல் காலத்தில் தலைகாட்டுகிறது. தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் ஒளித்து வைத்திருந்த கருப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சம் வெள்ளையாகத் தலைகாட்டுகிறது. அதுவும்கூட அதிகம் அல்ல. யானை தன் துதிக்கையால் எடுத்து வாயில் பிடித்துக்கொண்ட பெரிய சோற்று உருண்டையிலிருந்து சில பருக்கை கீழே விழுந்தால் அது பல எறும்புகளுக்கு உணவாகும். அதுபோலவே, வரிப் பணத்தை சாப்பிட்டவர்களிடமிருந்து கிடைக்கும் சில பருக்கைகளே தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுக்கப்படும் பணமும், பரிசுப் பொருள்களும்.

ஐந்தாண்டு பட்ஜெட் வருவாயில் இரண்டாண்டு பட்ஜெட் ஆட்சி செய்வோரின் கஜானாவுக்கு எந்தெந்த வழிகளிலோ போய் விடுகிறது. அது மாயப் பணம், நம் கண்களில் படுவதில்லை.

ஒரு குடும்பத்தின் செலவு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று குடும்பத் தலைவனோ, தலைவியோ நினைக்கிறார்கள். வரவுக்குள் செலவை அடக்க வேண்டும் என்பதற்காக சிக்கனமாக வாழ்கிறார்கள்.

மாநிலமே தங்கள் குடும்பம் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் வரவுக்குள் செலவை அடக்குவதில்லை. அது முடியாதோ என்று கேட்டுவிட வேண்டாம். முடியும்; நிச்சயம் முடியும். வரவு முழுவதையும் வழியில் யாரும் மடக்கிவிடாமல் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Salem

Dinamani Salem

இறுதி ஆட்டத்தில் ஷரச்சி பெங்கால் டைகர்ஸ்

ஹாக்கி இந்தியா மகளிர் லீக் தொடரில் எஸ்ஜி பைப் பர்ஸ் அணியை சடன் டெத் மு றையில் வீழ்த்தி இறுதி ஆட்டத் துக்கு தகுதி பெற்றது ஷரச்சி பெங்கால் டைகர்ஸ் அணி.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

Dinamani Salem

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

Dinamani Salem

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Salem

Dinamani Salem

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Salem

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size