Versuchen GOLD - Frei
பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!
Dinamani Salem
|August 26, 2025
ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!
ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!
பாதை மாறாப் பயணங்களின் அடிநோக்கம் 'இலாபகரமானது' என்பதுதான்! இத்தகைய நிலையில் எவன்தான் கட்சி மாறுவான்? கட்சி மாறினால் ஈவு போய்விடாதா? ஒரு கட்சி சிலருக்கு மட்டும் இத்தகைய வாய்ப்புகளைக் கொடுத்து விட்டு, பிறரைத் தெருவிலே விட்டு விட்டால், அந்தக் கட்சியில் எவனும் தொடர்ந்து இருக்க மாட்டான்! ஆட்சிக்கு வரும்போது சுரண்டல் பரவலாக்கப்பட்டு விடுவதுதான் இந்தக் கட்சிகளின் ஏற்றத்திற்கான ஒரே அடிப்படை!
மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பஞ்சாயத்து, கூட்டுறவு நிறுவனங்கள்; கோயில்களில் அறங்காவலர்கள்; சாலை போடல், ஏரி தூர்வாரல் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள்; அரசு நிறுவனங்களில் வேலை பெறல்; வேலைபெறத் தகுதி இல்லை எனில், தகுதியுடையவனுக்குப் பரிந்துரைத்து அதற்குப் பணம் பெறல்; இன்னும் எண்ணத்தொலையாச் சலுகைகள், வசதிகள்!
இவைபோக கனிமவளச் சுரண்டல்; மலைகளைச் சல்லிகளாக்குவதில், கிரானைட்டாக ஏற்றுமதி செய்வதில் சுரண்டல்; வன வளச் சுரண்டல்; ஆற்றுமணல் சுரண்டல்! இவற்றிற்கிடையே மக்களுக்கும் சில கஞ்சிப் பருக்கைகள்!
இவற்றை அடைய முடியாத அடிமட்டத் தொண்டர்களுக்கு ஊர்வலம் போனால் குவார்ட்டர் மற்றும் பிரியாணி; ஒரு நாள் சம்பளம்; கூட்டம் கேட்க வருவதற்கு தையல் மிசின், குடம், சேலை, வேட்டி என்று அடிநிலைத் தொண்டர்களுக்கும் பங்கிடல்! இந்தியாவிலேயே பெரிய கார்ப்பரேட் தொழில் அரசியல் கட்சி நடத்துவதுதான்! வங்கத்தில் நடப்பது 'மமதா மாடல்' தமிழ்நாட்டில் நடப்பது 'திராவிட மாடல்'! பெயர்தான் வித்தியாசம்.
காந்திதான் அரங்குக்குள் இருந்த அரசியலைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்தவர்! அவர் காலத்தில் காங்கிரசில் மாவட்டத்திற்கு வெறும் ஐநூறு, ஆயிரம் பேர் தான் இருப்பார்கள்! தொண்டும், சிறை புகலும், பொதுவாழ்வின் நோக்கமாக இருந்ததால், வெட்டித்தனமானவனுக்கெல்லாம் கட்சியில் என்ன வேலை?
இன்றைக்குக் கட்சிகளில் எழுபது, எண்பது இலட்சம் பேர் உறுப்பினராக இருப்பதற்குக் காரணம், கட்சி ஒரு 'தொழிலாகி' விட்டதுதான்! இதைத் தொழிலாக்கியது கருணாநிதி! மனம் தடித்தவர்கள் அரசியலுக்குள் நுழைகின்ற காலம் தொடங்கியது!
Diese Geschichte stammt aus der August 26, 2025-Ausgabe von Dinamani Salem.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Salem
Dinamani Salem
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Salem
மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Salem
கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size