Versuchen GOLD - Frei
மனிதம் சொல்லும் மரபு
Dinamani Salem
|July 07, 2025
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். ஒரு சிறு உதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பதுபோல் நம்பிக்கை துளிர்விடும்.
வாழ்க்கை என்றால் மேடு, பள்ளங்கள் இருக்கும்; ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதுபோல நல்லவர்களும், தீயவர்களும் சேர்ந்ததுதான் இந்த உலகம். மனிதர்களில் எல்லோருமே புத்தர்களாக, உத்தமர்களாக, நீதிவான்களாக, தர்மசிந்தனை உடையவர்களாக, அறவழியில் நடப்பவர்களாக, சத்தியத்தைத் தாங்கிப்பிடிப்பவர்களாக, சமுதாய அக்கறை கொண்டவர்களாக இருப்பதில்லை.
தராசுத் தட்டுக்களைப் போல சமமாக இருக்க முடியாது. சமூக ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, எங்கு பார்த்தாலும் அடாத செயல்கள் நடப்பது போலவும், எல்லோரும் காமக் கொடூரர்களாகவும், ரத்தவெறி பிடித்து அலைபவர்வர்களாகவும் தெரிகிறார்கள். நமக்கும் மனித குலத்தின் மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து வருகிறது. நம்முடன் பழகும் அனைவரும் ஆதாயத்துக்காகவும், உள்நோக்கத்துடனும்தான் பழகுகிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம்.
நாம் ஒருவருடனும் உள்ளன்புடன் பழகாமல் தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். நல்லவர்கள் நிறைய இருக்கிறார்கள். மனசு முழுக்க கருணையையும், அன்பையும் நிரப்பிக் கொண்டு எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். சமுதாய நலனுக்காக, பொருள் நிறைந்தவர்கள் பணத்தையும், அல்லாதவர்கள் உடல் உழைப்பையும் நல்குகிறார்கள். பால் நினைந்தாடும் தாயைப்போல பரிவு காட்டுகிறார்கள்.
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உற்றுழி உதவுகிறார்கள்; நட்பெனும் நந்தவனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவர்கள். பெரிய உதவி என்று இல்லை. ஒரு சிறுஉதவி கூட ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும்; வாட்டத்தைப் போக்கும்; பட்ட மரம் துளிர்ப்பது போல் அவர்களின் நம்பிக்கை துளிர்விடும்.
பசுமையைப் பார்த்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி என்பதைப்போல, பலர் செய்யும் நல்ல செயல்களைப் பார்க்கும் போது மனசுக்குள் பன்னீர் தெளித்ததைப்போல இருக்கிறது. இறுகிய பாறை நெகிழ்வது போல இதயம் நெகிழ்கிறது. சட்டென வாழ்வு இனிமையாகிறது.
பிறருக்கு உதவி செய்யும்போது, அதுதரும் ஆனந்தம் எல்லையற்றது. நாம் காட்டும் சின்னச் சின்ன அன்பில் குளிர்ந்து போகின்றன பல உள்ளங்கள். உதவி பெறுபவர்களின் முக மலர்ச்சி நம் வாழ்க்கையில் ஒளி ஏற்றும்.
Diese Geschichte stammt aus der July 07, 2025-Ausgabe von Dinamani Salem.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Salem
Dinamani Salem
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Salem
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Salem
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Salem
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
1 min
January 11, 2026
Dinamani Salem
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Salem
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Dinamani Salem
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Salem
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
2 mins
January 11, 2026
Dinamani Salem
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Salem
தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்
ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
1 min
January 11, 2026
Translate
Change font size
