Facebook Pixel இது போருக்கான காலம் அல்ல! | Dinamani Ramanathapuram & Sivagangai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

இது போருக்கான காலம் அல்ல!

Dinamani Ramanathapuram & Sivagangai

|

June 21, 2025

எந்தவொரு போரும் உலகில் இதுவரை நிலையான அமைதியை ஏற்படுத்தியதில்லை. மாறாகப் பல மனித உயிர்களைப் பலிகொண்டு பேரழிவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. இஸ்ரேல்-ஈரான் மோதலை வேடிக்கை பார்க்காமல், உடனடியாக சமரசத்தை ஏற்படுத்துவது அமெரிக்கா, ரஷியா, சீனாவின் கடமை.

- முனைவர் வைகைச்செல்வன்

இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம் அடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகி விட்டன. இதுவரை சற்றேறக்குறைய 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்த நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், ராணுவத்தளபதிகள் 3 பேர் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிரத் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் 400 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இஸ்ரேலின் பாட்யாம் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பின்மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் வேறு சில பகுதிகளின் மீதும் ஏவுகணைகள் விழுந்தன.

ஈரானின் இலக்கியமும், ஈரான் மொழித் திரைப்படங்களும் மறக்க முடியாத ஆகச்சிறந்த படைப்புகள் என்பதை நாம் மறுதலித்துவிட முடியாது. ‘அனடோலியா’, ஈரான் மற்றும் மேற்கு மத்திய ஆசியாவின் சில பகுதிகள், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய ஈரானிய மொழிகளில் எழுதப்பட்டதொகுப்பு. எஞ்சியிருக்கும் மிகப் பழைமையான நூல்கள் ஜொராஸ்ட்ரியானிஸத்தின் புனித நூலான அவிஸ்டாவில் உள்ளன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போர் விமானங்களை வழங்கத் தயார்

ரஷிய அதிபர் புதின்

time to read

1 min

June 06, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

27 கருடசேவை ... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார்.

time to read

1 mins

June 05, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

பசுமையான உலகம்-பாதுகாப்பான எதிர்காலம்!

நாம் இயற்கையைக் காக்காவிட்டால், இயற்கை மனிதனைக் காப்பதில்லை என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மிகத் தெளிவாக உணரப்படுகிறது.

time to read

2 mins

June 05, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

ரூ.15 லட்சம் கோடி வருவாயை உயர்த்திக் காட்டிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்

பிரபல தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், கடந்த 5 ஆண்டுகளில் தனது கூட்டு வருவாயை ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்த்தி பொய்க் கணக்கு காட்டியதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 min

June 05, 2026

Dinamani Ramanathapuram & Sivagangai

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size