Versuchen GOLD - Frei
நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
Dinamani Pudukkottai
|June 11, 2026
மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றதையடுத்து, அதே ஆண்டு மே 26- ஆம் தேதி முதல்முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். இதையடுத்து நடைபெற்ற 2 மக்களவைத் தேர்தல்களிலும் பாஜக கூட்டணி வென்றதையடுத்து, தொடர்ந்து 3-ஆவது முறையாக அவர் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இதற்கு முன்பு, தேர்தலில் வென்று நாட்டின் பிரதமராக தொடர்ந்து 4,398 நாள்கள் ஜவாஹர்லால் நேரு பதவி வகித்ததே சாதனையாக இருந்தது. அதை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவின் மிக நீண்டகாலம் தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்ட பிரதமராக பணியாற்றிய மைல்கல்லை எட்டியதற்கு உங்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் பதவிக்காலத்தில், நாட்டின் அனைத்து துறைகளிலும் பெரும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பு, விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல், நடுத்தர மற்றும் புதிய நடுத்தர வர்க்கத்தினரின் நலன்களை பாதுகாத்தல் ஆகிய அனைத்திலும் உங்களின் அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்கு பார்வையும் செயல்களும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியமைத்துள்ளன.
Diese Geschichte stammt aus der June 11, 2026-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Pudukkottai
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Pudukkottai
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Pudukkottai
காவலர்கள் மீது வழக்கு தொடுக்கும் விவகாரம்: தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் அனைத்து நிலை காவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடுக்க அரசின் முன்அனுமதி தேவை என பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக உள் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Pudukkottai
திமுக கூட்டணியில் நீடிப்பதா ?: ஜூன் 27-இல் மதிமுக முடிவு
திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்துவரும் 27- ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Pudukkottai
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Listen
Translate
Change font size

