Versuchen GOLD - Frei

இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம்தான்!

Dinamani Puducherry

|

August 05, 2025

இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை, சர்வதேச அமைப்புகள் தரும் புள்ளிவிவரங்கள் டிரம்ப் கருத்தை மறுக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை ‘வளரும்’ என்றுகூட கூறாமல் ‘வளர்ந்த’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருளாதாரத்தை ‘சரிந்த பொருளாதாரம்’ என்று கூறியுள்ளார். இந்தியாவும், ரஷியாவும், தங்களது சரிந்த பொருளாதாரத்தை இணைந்தே எடுத்துச் செல்லலாம் என்றும் கேலி செய்துள்ளார்.

இந்தியாவின் அதிக வரி விதிப்பையும், வர்த்தகக் கொள்கைகளையும் சுட்டிக் காட்டி, ஆகஸ்ட் 7 முதல் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருள்கள் மீது 25% கூடுதல் வரி விதித்துள்ளார். மேலும், ரஷிய எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபராதம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

அரசியல் கொள்கைகள் எதுவாக இருப்பினும், நாட்டின் இறையாண்மையையும், பொருளாதாரப்பாதுகாப்பும், அந்நிய நாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, ஆளும் அரசை ஆதரிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் தார்மிகக் கடமையாகும். ஆனால், டிரம்ப்பின் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரித்தும், ஆமோதித்தும் வரவேற்றுள்ளார்.

‘அமெரிக்க அதிபர் உண்மையைச் சொல்லி உள்ளார். இந்தியப் பொருளாதாரம் செத்து விட்டது. பிரதமர் மோடி அதைக் கொன்று விட்டார். இது பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர உலகிலுள்ள அனைவருக்கும் தெரியும்’ என்று ஜாடை மாடையாகக்கூட அல்ல; நேரடியாகவே கடுமையாகத் தாக்கி உள்ளார். தனது கருத்தை உறுதிப்படுத்த நான்கு காரணங்களை முன்வைக்கிறார்.

‘மோடி-அதானி கூட்டணி; கௌதம் அதானியின் வர்த்தகங்கள் அனைத்துக்கும் கண்மூடித்தனமான ஆதரவு; பண மதிப்பிழப்பும், குறைபாடுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி விதிப்பும்; இத்தகைய கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன.

Dinamani Puducherry

Diese Geschichte stammt aus der August 05, 2025-Ausgabe von Dinamani Puducherry.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

கீழணையிலிருந்து செப்.3-ல் பாசனத்திற்கு நீர் திறப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள அணைக் கரை கீழணையிலிருந்து கடலூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செப்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Puducherry

வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Puducherry

மோசமான வானிலை: அந்தமான் விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது

சென்னையிலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Puducherry

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.

time to read

1 min

September 02, 2025

Dinamani Puducherry

உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!

ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.

time to read

2 mins

September 02, 2025

Dinamani Puducherry

வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி

கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Puducherry

பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Puducherry

அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம். வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Puducherry

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சேர்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Puducherry

மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: அரசு கல்லூரி மாணவிகள் சாதனை

கடலூர் மாவட்ட அளவில் நடந்த பூப்பந்து போட்டியில், சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size