The Perfect Holiday Gift Gift Now

பூமித் தாயைக் காப்போம்

Dinamani Puducherry

|

June 26, 2025

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? - நாங்கள் சாகவோ? என்று மகாகவி பாரதி பாடினார். ஆங்கிலேயர்கள் வந்து நம் நாட்டைக் கொள்ளையடித்தது குறித்து அவர் மனம் வருந்திப் பாடினார். விடுதலை பெற்ற தேசத்தில், நம் நாட்டவர்களே மிகப் பெரிய அளவில் கொள்ளையடிப்பதை யார் பாடுவது?

- உதயை (மு. வீரையன்)

மனித இனத்தை மட்டுமல்ல, உலக உயிர்களைத் தாங்கியிருப்பது பூமியாகும். பூமியிருந்தால்தானே உயிர்கள் உயிர்வாழ முடியும். பூமி உயிர்களால் நிரம்பி வழிகிறது. அந்த பூமியைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வோர் உயிருக்கும் உள்ளது. மனித உயிர்களுக்கு இந்தக் கடமை அதிகமாக உள்ளது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்றார் திருவள்ளுவர். தன்னைத் தோண்டுகிறவர்களையும் தாங்கி நிற்கும் பூமியைப்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும் என்று அவர் கூறுகிறார்.

பூமி என்பது வெறும் மண்ணும், மக்களும் அல்ல; மலை, கடல், காடுகள், ஆறுகள், ஏரிகள் எல்லாம் சேர்ந்தது தான். இவை எல்லாம் அழிக்கப்படுகின்றன. மலைகளிலும், காடுகளிலும் ஆண்டாண்டு காலமாக வாழும் மக்களையும், கடல்சார் மக்களாகிய மீனவர்களையும் விரட்டியடித்துவிட்டு, அந்த நிலப்பரப்பில் இருக்கும் கனிமவளங்களைக் கொள்ளையடிக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவேற்ற முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையைக்கூட நிறைவேற்ற முடியாது என்றார் மகாத்மாகாந்தி. பேராசை கொண்ட மனிதனின் கொள்ளையால் இயற்கை வளங்கள் இல்லாமல் போகின்றன. இதற்கு அரசு அதிகாரிகள் துணை போகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றமே உறுதிசெய்துள்ளது.

பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பவர்களாக குவாரி உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்று குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் புரவிபாளையம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ஆம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்திவருகிறார். அவரது குவாரியில் விதிமீறல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு 2021 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாகக் கூறப்பட்டது. விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வு செய்த அதிகாரிகள் குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிமவளங்கள் எடுத்ததாகக் கூறி ரூ.32 கோடியே 29 லட்சத்து 77,792 அபராதம் விதித்து 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Puducherry

ஜன.5 முதல் 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஜன.

time to read

1 min

January 04, 2026

Dinamani Puducherry

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Puducherry

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Puducherry

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

January 04, 2026

Dinamani Puducherry

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Puducherry

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Puducherry

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size