Versuchen GOLD - Frei

வடக்கிருந்து உயிர் நீத்தல்

Dinamani Puducherry

|

June 01, 2025

டக்கே தலைவைத்துப் படுக்காதே என்ற பழங்கூற்றுக்கு அறிவியல் பொருள் கொடுப்பாரும் உண்டு. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பொருளாதார சமத்துவம் விழைந்தோர் கூறியதுண்டு.

- முதுமுனைவர் அரங்க. பாரி

டக்கே தலைவைத்துப் படுக்காதே என்ற பழங்கூற்றுக்கு அறிவியல் பொருள் கொடுப்பாரும் உண்டு. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பொருளாதார சமத்துவம் விழைந்தோர் கூறியதுண்டு. "வடக்கில் இமயமலை பாப்பா, தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா" என்று இந்திய எல்லைகள் வடக்கும் தெற்கும் இருப்பதைப் பாடினார் பாரதியார். வடக்கே காசியும் தெற்கே இராமேச்சுரமும் புனிதத் தலங்களாகப் பொலிகின்றன.

பண்டையத் தமிழகத்தில் உயிர்விட விரும்புவோர் அமைதியான நெறியில் உண்ணாநோன்பிருந்து வீழ்ந்து உயிர் துறப்பதும், நெருப்பிடை மூழ்குவதும், ஆற்றில் புகுவதும் கடலில் பாய்வதும் என உயிர் போக்கிக் கொள்வது பற்றி கூறப்படுகின்றன. உயிரைப் போக்கிக் கொள்ளப் பல முறைகள் உள்ளன.

நினைந்த அளவில் உள்ளம் நெகிழ்ந்து உயிர் போவதுண்டு. போராடிப் போராடி நெடுநாள் படுக்கையில் கிடந்து உயிர் போவதும் உண்டு.

வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின் தீர்தல் செல்லாது என் உயிர் (புறம் 159) என்று பெருஞ்சித்திரனார் தம் தாயின் நிலையைப் பாடுவர். "இன்னும் உயிர் போகவில்லையே! என வருந்துகிறாள் அத்தாய். தானாகப் போகும் காலம் வரை இருந்து உயிரிழத்தல் இயற்கை இறப்பாகும். அதற்கு முன் அதனை மாய்த்துக் கொள்வது சில சூழ்நிலைகளால் நேர்வதாகும்.

"வடக்கிருந்து உயிர்விடுதல்" என்பது தற்கொலையன்று. அது ஒரு நோன்பாகும். சமண தீர்த்தங்கரர்களில் இருபத்து நான்காவது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார். அவர் வடக்கிருந்து உயிர்விட்டார். அவர் உயிர் நீத்த அன்றிரவு, சமண முனிவர்கள் விளக்கேற்றி வைத்து அவரைக் குறித்து நினைவு நெகிழ்ந்து போற்றினர். அந்த நாளின் இரவே தீபாவளியாக உருவெடுத்துப் பிற சமயத்தும் புகுந்தது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆட்சியில் பங்கு சாத்தியம்

ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Puducherry

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size