Facebook Pixel வாழையடி வாழையென... | Dinamani Puducherry – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

வாழையடி வாழையென...

Dinamani Puducherry

|

April 30, 2025

காஞ்சி காமகோடி பீடத்தின் புதிய இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த-ரிக் வேதம் பயின்ற கணேச சர்மா திராவிட் துறவறம் ஏற்க இருக்கிறார். அதாவது, 42 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சீடரை அட்சய திருதியை (இன்று) நன்னாளில் ஏற்கிறார்.

- கோதை ஜோதிலட்சுமி

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் நான் ஒருவன் அலனோ என்று அத்வைத நிலை அடைந்த வள்ளலார் சுவாமிகள் பாடி வைத்திருக்கிறார். இந்தப் பாரத புண்ணிய பூமியில் மகான்களும் புண்ணிய புருஷர்களும் தொடர்ந்து அவதரித்து வந்திருக்கிறார்கள். மானுட சமூகம் நல்வழிப்பட அயராத உழைப்பைத் தந்திருக்கிறார்கள். ஆதிசங்கரர் அப்படியான மகான்களில் ஒருவர். தர்மம் நிலைத்திருக்க அவர் தன்னை அர்ப்பணித்தவர். தமது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதரிடம் அத்வைதம் முதலிய வேத விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

தேசம் முழுவதும் நடந்து வேதங்களைப் போற்றும் வைதிக மரபை மீட்டெடுத்தார். அத்வைதமே வேதம் கற்பிக்கும் சித்தாந்தம் என்று நிறுவினார். உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதினார். சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றினார்.

பல்வேறு மதங்களாகப் பிரிந்தும் குழப்பத்தில் ஆழ்ந்தும் கிடந்த பாரத தேசத்தைத் தெளிவு பெறச் செய்ய ஷண்மதங்கள் என்ற ஆறு சமயப் பிரிவுகளை வகுத்து முறைப்படுத்திக் கொடுத்தார். தெய்வங்களை வழிபட துதிகளையும் பாடி வைத்து மக்கள் மனங்களில் தெளிவை ஏற்படுத்தினார். பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் ஆகிய மூன்று வழிகளிலும் ஞானத்தை அடைய முடியும் என்பதை விளக்கி அதற்கான முறைமைகளையும் தந்தார். இதுவே அவரது கருணையும் அன்பும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் இருந்ததற்கான சான்று.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Puducherry

மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா

அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவர்

time to read

1 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size