Facebook Pixel இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு | Dinamani Namakkal – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

Dinamani Namakkal

|

May 02, 2025

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை

புது தில்லி, மே 1: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்ததாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத்தை ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே இப்போது எழுந்துள்ள பதற்றமான சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இது தொடர்பாக ராஜ்நாத் கூறியதாவது: பாகிஸ்தான் மூர்க்கத்தனமான நாடு என்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் வெளிப்பட்டுவிட்டது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதிலும் அந்த நாடு முக்கியப் பங்காற்றியுள்ளது. இதுபோன்ற செயல்களை ஒட்டுமொத்த உலகமும் கண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க அமைச்சரிடம் கூறினேன்.

அதற்கு, 'இனிமேலும் இது போன்ற பயங்கரவாத செயல்களை உலக நாடுகள் கண்டும் காணாமலும் இருக்க முடியாது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். இந்த விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்கும்' என்று ஹெக்செத் கூறினார்.

பயங்கரவாதத்தை யார் ஆதரித்தாலும் அது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற பயங்கரவாத ஆதரவு செயல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்' என்று ஹெக்செத் என்னிடம் கூறினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்

time to read

1 mins

June 20, 2026

Dinamani Namakkal

எபோலா தொற்று உயிரிழப்பு 200-ஐ கடந்தது!

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-ஐ கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

ஆளுநர் உரையை அட்லி திரைப்படத்துடன் ஒப்பிட்டு விமர்சித்த திமுக

ஆளுநர் உரையை, திரைப்பட இயக்குநர் அட்லீயின் திரைப்படத்துடன் ஒப்பிட்டு, குன்னம் தொகுதி திமுக உறுப்பினர் சா.சி. சிவசங்கர் விமர்சனம் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

இரு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக காவல் துறையில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

யார் ஆட்சியில் தலித் அமைச்சர்கள் அதிகம்?

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த ஆட்சியில் அதிக முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கப்பட்டது என்பது குறித்த விவாதம் பேரவையில் எழுந்தது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சட்டம்-ஒழுங்கை காக்க என்ன நடவடிக்கைகள்?

தமிழகத்தில் போதைப் பொருள்கள், பாலியல் குற்றங்களைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பட்டியலிட்டார்.

time to read

1 min

June 20, 2026

Dinamani Namakkal

கேரள முன்னாள் முதல்வர் மகளின் வங்கி லாக்கரில் சோதனை

பண முறைகேடு வழக்கில் நடவடிக்கை

time to read

1 min

June 20, 2026

Translate

Share

-
+

Change font size