Versuchen GOLD - Frei
அரசு போய் விடும்! பிளவு போகுமா?
Dinamani Madurai
|December 24, 2025
திருப்பரங்குன்றத்தில் முருகனின் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதியரசர் சாமிநாதன் அதற்கு இசைவாக ஒரு தீர்ப்புரைத்தார்.
அவ்வாறு தீர்ப்புரைத்த நீதியரசரை நாடாளுமன்றப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் மதவாதி என்று பலபடப் பழியுரைத்தனர்!அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக ஒரு விண்ணப்பம் வைத்தது. இதற்கு எதிர்க்கட்சிகளெல்லாம் ஒன்று திரண்டன! ஒவ்வொரு தீர்ப்புக்கும் ஒவ்வொரு நீதியரசரைப் பதவி நீக்கம் செய்வதென்றால், கடைசியில் நீதிமன்றங்களெல்லாம் கழுதைகள் மேயும் பாழ் நிலமாகிவிடாவா!
அது முருகனின் மலை; அவன் 'பரங்குன்றத்து முருகன்' என்றே அழைக்கப்படுகிறான்! அவனைக் குறிஞ்சி நிலக் கடவுள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது! சங்க இலக்கியங்கள் அவனைப் பாடுகின்றன! கார்த்திகை தீபம் அவனுக்குரியது.
அன்றைக்கு எல்லா வீடுகளிலும் வீடு முழுவதும் விளக்கேற்றப்படுகிறது. வீடு முழுவதும் விளக்கேற்றிவிட்டு, மலையில் ஏற்றுவதில்லை என்றால் அந்தப் பண்டிகைக்கே பொருளில்லையே!
இது நூறாண்டு காலமாக வழக்கத்தில் இல்லை என்பது ஒரு வாதமாகாது! முருகன் மலைக் கடவுள் என்பதும், கார்த்திகை தீபம் அவனுக்குரிய விழா என்பதும் ஈராயிரம் ஆண்டு ஒழுக்கலாறுகள்! விட்டுப் போன ஒன்றைப் புதுப்பிப்பது புதிய வழக்கமாக ஆகாது!
எல்லா மதப் பண்டிகைகளும் சடங்குகளின் வழியாகவும் கொண்டாட்டங்களின் வழியாகவுமே தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன!
ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்துச் சண்டையிட்டு வாழும் மனிதர்களுக்கு, இத்தகைய பண்டிகைகள் சமூகம் முழுவதையும் ஒருமைப்படுத்துவதோடு, அவை ஒரு மாறுதலாகவும் ஆறுதலாகவும் அமைகின்றன!
இறைவன் ஒருவனே என்று எல்லாச் சமயங்களும் உடன்பட்டாலும், அவரவர் களின் வாழ்க்கை முறை வேறுபாட்டால், வழிபடும் முறைகளும், அவற்றின் வாயில்களான பண்டிகைகளும் வேறுபடுகின்றன.
நம்மிடையே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து மகான்களால் தோற்றுவிக்கப்பட்ட சமயங்கள் வரையறை உடையவை! ஒரு சிறு அளவு மாறுபாட்டைக் கூட உடன்படாதவை! ஏனெனில் எந்த மாறுபாடும் அந்தச் சமயங்களைச் சிதைத்துவிடும்!
ஆனால், மண்ணில் இயற்கையாகத் தோன்றிய சமயங்கள் ஏராளமான வேறுபாடுகள் உடையவை! வரையறைகள் இல்லாதவை. ஒவ்வொரு காலப் பழக்கத்தையும் இத்தகைய சமயங்கள் சேர்த்தே சுமக்கும்!
Diese Geschichte stammt aus der December 24, 2025-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Madurai
தேசியமும் தர்மமும் காக்க...
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
3 mins
January 07, 2026
Dinamani Madurai
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Madurai
பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
1 min
January 07, 2026
Dinamani Madurai
சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்
134 ரன்கள் முன்னிலை
1 mins
January 07, 2026
Dinamani Madurai
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Madurai
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Madurai
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Madurai
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Madurai
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Listen
Translate
Change font size
