The Perfect Holiday Gift Gift Now

பூவுலகு எனும் நம் விமானம்

Dinamani Karur

|

July 19, 2025

விமானங்களைப் போலவே பூமி என்ற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரம் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புகளும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

- சுப. உதயகுமாரன்

பூமியை விட்டு வெளியே சென்று நமது உலகின் நிலைமையை அலசி ஆராய்ந்தார்கள் சில அறிஞர்கள். ஹென்றி ஜார்ஜ் என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் தனது 1879-ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம் என்று குறிப்பிட்டார். அந்த உருவகத்தை ஜார்ஜ் ஆர்வெல் என்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் 1937-இல் வெளியிடப்பட்ட தன்வரலாற்று நூலில் எடுத்தாண்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுப்போய் பின்னர் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றிய அட்லாய் ஸ்டீவன்சன் நமது பூமியை விண்கலம் என்று அழைத்து, அதன் மீது பயணம் செய்யும் பயணிகள் பாதி பேர் பாக்கியவான்களாகவும், பாதி பேர் தரித்திரர்களாகவும், பாதி பேர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பாதி பேர் பரிதவிப்பவர்களாகவும், பாதி பேர் அடிமைகளாகவும், பாதி பேர் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாதிரியான பெருத்த வேறுபாடுகளோடு எந்தக் கலமும், எந்தப் பயணி யும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. இதைக் களைவதன் மூலம்தான் நாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்று 1965-ஆம் ஆண்டு தனது ஐ.நா. உரை ஒன்றில் குறிப்பிட்டார்.

கென்னத் போல்டிங் என்கிற சமூகவியல் அறிஞர் 1966-ஆம் ஆண்டு முகிழ்க்கும் விண்வெளிக்கலமாம் பூமியின் பொருளாதாரம் எனும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர், 1971-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக இருந்த ஊ தாண்ட் தனது 'பூமி நாள்' உரையில் குளிரான விண்வெளியில் இதமான, மெல்லிதான உயிர்களுடன் சுழன்றும் சுற்றிக்கொண்டும் இருக்கும் நமது அழகான விண்கலமாம் பூமிக்கு சமாதானகரமான, மகிழ்ச்சியான பூமி நாள்கள் மட்டுமே வந்து சேரட்டும் என்று வாழ்த்தினார்.

சர்வதேச சமாதான ஆய்வுக் கழகத்தின் மாநாடுகளில் கென்னத் போல்டிங் மற்றும் அவரது துணைவியார் எலீஸ் போல்டிங் ஆகியோருடன் பலமுறை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த உருவகம் பற்றி நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம்.

நமது பூமியை ஒரு விமானமாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த பூமியில் வாழும் ஏறத்தாழ 823 கோடி மனிதர்களையும் இந்த விமானத்தில் சேர்ந்து பயணம் செய்யும் பயணிகளாக உருவகம் செய்யுங்கள்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Karur

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Karur

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

பிசிசிஐ உத்தரவு எதிரொலி

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size