Facebook Pixel தலைமை மாற்றமா, ஆட்சி மாற்றமா? | Dinamani Kanyakumari – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

தலைமை மாற்றமா, ஆட்சி மாற்றமா?

Dinamani Kanyakumari

|

June 02, 2025

2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டி யிட்டு, 135 இடங்களுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது.

- ந. முத்துமணி

பெங்களூரு, ஜூன் 1: 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் போட்டி யிட்டு, 135 இடங்களுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 'முதல்வர்' பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி காணப்பட்டது.

கடந்தகால மரபுப்படி கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் தனக்கே முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று டி.கே.சிவகுமார் வாதிட்டு வந்தார். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினரின் ஆதரவைத் திரட்டுவதற்கு காரணமாக இருந்ததால், தனக்குத்தான் முதல்வர் பதவியைத் தரவேண்டும் என்று சித்தராமையா அடம்பிடித்தார்.

பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும், வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கும் உள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையாவை ஓரங்கட்டினால், வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைமை உணர்ந்தது. தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் டி.கே.சிவகுமாரை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக ஆட்சி நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வமாக அறிவிப்பையும் கட்சி மேலிடம் அறிவிக்கவில்லை. மாறாக, கர்நாடகத்தில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவி யேற்பார்கள் என்று மட்டும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, 2023, மே 20 ஆம் தேதி இருவரும் பதவி யேற்றுக்கொண்டனர்.

முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் ஏதாவது செய்து கொள்ளப்பட்டதா என்று கேட்டதற்கு, 'மக்களோடு அதிகாரப் பகிர்வு செய்து கொண்டுள்ளோம்' என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் அப்போது பதிலளித்திருந்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Kanyakumari

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான 'ஜிஹாதி போதைப் பொருள்' என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Kanyakumari

படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!

'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Translate

Share

-
+

Change font size