Versuchen GOLD - Frei
அறம் பெருகட்டும்!
Dinamani Erode & Ooty
|August 04, 2025
மழலைப் பேசும் தமிழ்க் குழந்தையிடம் ஒளவைப் பெருமாட்டி கற்றுத் தருகிற முதல் மொழி ‘அறம் செய விரும்பு’ என்பதேயாம். அவ்வழியே மன்னன் முதல் மக்கள் வரையிலும் அறத்தை விரும்பிப் பேணுகிற நாட்டில் அமைதி நிலவும்; இன்பம் செழித்தோங்கும்; மானுடம் வெல்லும்.
பழந்தமிழரின் வாழ்க்கை ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்போடு புணர்ந்த ஐந்திணை’ வாழ்க்கையாகப் பகுக்கப்பட்டிருந்தது. இந்த மரபை மாற்றி அறம், பொருள், இன்பம் என்று முதன்மைப்படுத்தின அற இலக்கியங்கள். முதல், கரு, உரிப் பொருள்களிலிருந்து மேம்பட்டு வாழ்வுக்குரிய உறுதிப்பொருள்களை உணர்விக்கும் பெரும்பணியைச் செய்தன அவை.
காதலும் வீரமும் கண்ணெனப் போன்றிய சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு, காதலையும் வீரத்தையும் அறமே ஒருசேரப் போதிக்கிறது; ஆதலால், அறத்தைக் கொள்மின் என வழிகாட்டின அற இலக்கியங்கள்.
அறம், வாழ்க்கைக்குத் தேவையான முதற்பொருள் மட்டுமன்று; இலக்கியத்துக்கும் அதுவே அடிப்படை. அறத்தை நூற்பயன்களில் முதன்மை என்கிறது நன்னூல். அன்புசார்ந்த அறத்தைத் தமிழர்கள் அகம் என்றனர். இன்பம் முதலாகிய மற்றெல்லாவற்றையும் புறம் என்றே அவர்கள் கருதினர். இன்பமும் பொருளும்கூட அறத்தோடு இயைகிற வேளையில் அதுவும் அகமாகிப் போவது அற்புதமல்லவா?
அரசியலாளர்களுக்கே அறம் முதன்மையானதாக விளங்குகிறது. சட்டங்களை இயற்றுதலோடு முடிந்து விடுவதில்லை அரசின் கடமை; இயற்றிய சட்டத்துக்கு மக்களிடமிருந்து நன்மதிப்பை ஈட்டுதலும், அந்தச் சட்டத்தை இடையறாது தொடர்ந்து தானே முன்னின்று காத்தலும், காத்த அந்தச் சட்டத்தின் தொகுதியை மேலும் மேலும் விரிவுபடுத்தி வகுத்தலும் ஓர் வல்லரசுக்குரிய பெருமையைப் பெற்றுத் தரும். அதாவது, சட்டம் உயர்ந்து யாவருக்கும் பொதுவான அறமாகிறபோதுதான் அது சிறப்புடையதாகிறது. பண்டைக்கால மன்னர்களின் ஆட்சிக்கு அறமே முதன்மையாக விளங்கியிருக்கிறது.
மன்னனுக்கு வெற்றி தருவது வேலன்று, அவன் முறையோடு நடத்துகின்ற கோல் தான் என்கிறார் திருவள்ளுவர்.
Diese Geschichte stammt aus der August 04, 2025-Ausgabe von Dinamani Erode & Ooty.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Erode & Ooty
ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலர் கைது
திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
July 01, 2026
Dinamani Erode & Ooty
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Erode & Ooty
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Erode & Ooty
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Erode & Ooty
முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா
பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Erode & Ooty
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Erode & Ooty
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Erode & Ooty
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Erode & Ooty
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Translate
Change font size
