Versuchen GOLD - Frei
எங்களது வாக்குறுதிகள் நம்பகத்தன்மையுடையவை!
Dinamani Dharmapuri
|April 02, 2026
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுகவின் மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் விஜய்யின் தவெக பக்கம் திரும்புவதாகக் கூறப்படுவது குறித்து?
புதிதாக ஒருவர் அரசியலுக்கு வரும்போது இதுபோன்ற கருத்துகள் வெளியாவது வழக்கம்தான். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் தவறுகளை சட்டப்பேரவை, நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் மக்கள் மன்றத்திலும் சுட்டிக்காட்டியது அதிமுகதான். அந்த வகையில், அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குதான் 100 சதவீதம் கிடைக்கும்.
அதிருப்தி வாக்குகள் தவெக வுக்குச் செல்லாது என்று உறுதியாக நினைக்கிறீர்களா?
ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என விஜய் கருதியிருந்தால், தவெக தொடங்கப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பங்கேற்று, தனது செல்வாக்கை நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. காரணம், தனக்கு இல்லாத செல்வாக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டே அரசியல் செய்யலாம். என்பதுதான் அவரது நோக்கமாக உள்ளது.
தவெகவின் தாக்கம் இந்தத் தேர்தலில் எப்படி இருக்கும்?
குறிப்பிடத்தக்க அளவில் இருக்க வாய்ப்பில்லை. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவதாக பொதுமேடைகளில் விஜய் பல முறை அறிவித்தும், பெயரளவுக்குச் செயல்படும் கட்சிகள்கூட அவருடன் இதுவரை கூட்டணி அமைக்கவில்லை. இது, அவரை நம்பி கூட்டணி அமைக்க யாரும் தயாராக இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. தவெக தற்போது அரசியல் களத்தில் பாலபாடம் படிக்கிறது. மழலையர் பள்ளியில் பயிலும் குழந்தை முனைவர் பட்டம் பெற முயற்சிப்பதைப் போன்றுதான் உள்ளன தவெகவின் தேர்தல் செயல்பாடுகள்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்துமா?
கடந்த 54 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய அரசியல் கட்சி என்ற நற்பெயர் அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. இதன் காரணமாக, அதிமுகவின் வாக்குறுதிகள் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெற்றிக்கு மிகப் பெரிய வியூகம்.
Diese Geschichte stammt aus der April 02, 2026-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
முதல் வெற்றியுடன் மீண்டது கொல்கத்தா
வருண், ரிங்கு சிங் அபாரம்
1 mins
April 20, 2026
Dinamani Dharmapuri
பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்
அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
ஹோர்முஸ் நீரிணையை மேலும் ஒரு இந்திய கப்பல் கடந்தது
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 'தேஷ் கரீமா' என்ற வணிகக் கப்பல் இந்தியா நோக்கி புறப்பட்ட தாக மத்திய அரசு தெரிவித்தது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், ஈரோடு, பரமத்தி வேலூர், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை உள்பட 14 இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான்
அமெரிக்க போர்க் கப்பல்களின் முற்றுகை நீடிக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
ஆர்தர் ஃபில்ஸுக்கு பட்டம்
நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் 6-2, 7-6 (7/2) என்ற நேர் செட்களில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தி, வாகை சூடினார்.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
வாகை சூடினார் ரைபகினா
ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.
1 min
April 20, 2026
Listen
Translate
Change font size

