அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!
Dinamani Dharmapuri
|September 05, 2025
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.
ஆண்டுதோறும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5), அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவர் தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். இவர் அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும், தன்பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார்.
தன் முதல் பணியை சென்னை மாநில கல்லூரியில் தொடங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து, நீண்ட காலமாக தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 'சர்' பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு, இவருக்கு 1954-இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய போது, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை, ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாட அனுமதி கோரி அவருடைய மாணவர்கள் அவரை அணுகியபோது, 'எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனது பெருமைக்குரிய பாக்கியமாக இருக்கும்' என்ற கோரிக்கையைப் பரிந்துரை செய்தார். அதன்படி, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ளவர் குரு. நமக்கு இந்த உலகைக் கற்பிக்கும் ஆசான். நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். பெற்றோர் சொல்வதைவிட ஆசிரியர் சொல்வதைத்தான் மாணவர்கள் கேட்பார்கள். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்.
Diese Geschichte stammt aus der September 05, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரைப் பட்டியலை எதிர்த்து மனு
தலைமை நீதிபதியை அணுக அறிவுறுத்தல்
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
ரகசியம் காப்போம்!
மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் சொல்லாத பொய்கள் என்று சொல்லுவார்கள்.
2 mins
December 27, 2025
Dinamani Dharmapuri
துப்பாக்கி சுடுதல் தேசிய சாம்பியன்ஷிப்: சூரஜ் சர்மாவுக்கு 2 தங்கம்
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மத்திய பிரதேச வீரர் சூரஜ் சர்மா, சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்று அசத்தினார்.
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
ரேணுகா சிங் அபாரம்; ஷஃபாலி வர்மா அதிரடி
டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
தொடக்க நாளில் சரிந்த 20 விக்கெட்டுகள்
ஆஷஸ் வரலாற்றில் 116 ஆண்டுகளில் முதல் முறை
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
அர்ஜுன், காரில்சென் இணை முன்னிலை
ஃபிடே உலக ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியின் முதல் நாளில் 4 சுற்றுகள் முடிவில், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி இணை முன்னிலையில் இருக்கிறார்.
1 min
December 27, 2025
Dinamani Dharmapuri
இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்
அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
பிஎட் மாணவர்கள் விவரம்: புதுப்பிக்க அறிவுறுத்தல்
பிஎட் மாணவர்களின் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி பெண் நிர்வாகி வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளர்ச்சி மந்தம்
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதமாக மந்தமடைந்தது.
1 min
December 26, 2025
Translate
Change font size

