Versuchen GOLD - Frei

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

Dinamani Dharmapuri

|

August 26, 2025

ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

- பழ.கருப்பையா

ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

பாதை மாறாப் பயணங்களின் அடிநோக்கம் 'இலாபகரமானது' என்பதுதான்! இத்தகைய நிலையில் எவன்தான் கட்சி மாறுவான்? கட்சி மாறினால் ஈவு போய்விடாதா? ஒரு கட்சி சிலருக்கு மட்டும் இத்தகைய வாய்ப்புகளைக் கொடுத்து விட்டு, பிறரைத் தெருவிலே விட்டு விட்டால், அந்தக் கட்சியில் எவனும் தொடர்ந்து இருக்க மாட்டான்! ஆட்சிக்கு வரும்போது சுரண்டல் பரவலாக்கப்பட்டு விடுவதுதான் இந்தக் கட்சிகளின் ஏற்றத்திற்கான ஒரே அடிப்படை!

மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பஞ்சாயத்து, கூட்டுறவு நிறுவனங்கள்; கோயில்களில் அறங்காவலர்கள்; சாலை போடல், ஏரி தூர்வாரல் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள்; அரசு நிறுவனங்களில் வேலை பெறல்; வேலைபெறத் தகுதி இல்லை எனில், தகுதியுடையவனுக்குப் பரிந்துரைத்து அதற்குப் பணம் பெறல்; இன்னும் எண்ணத்தொலையாச் சலுகைகள், வசதிகள்!

இவைபோக கனிமவளச் சுரண்டல்; மலைகளைச் சல்லிகளாக்குவதில், கிரானைட்டாக ஏற்றுமதி செய்வதில் சுரண்டல்; வன வளச் சுரண்டல்; ஆற்றுமணல் சுரண்டல்! இவற்றிற்கிடையே மக்களுக்கும் சில கஞ்சிப் பருக்கைகள்!

இவற்றை அடைய முடியாத அடிமட்டத் தொண்டர்களுக்கு ஊர்வலம் போனால் குவார்ட்டர் மற்றும் பிரியாணி; ஒரு நாள் சம்பளம்; கூட்டம் கேட்க வருவதற்கு தையல் மிசின், குடம், சேலை, வேட்டி என்று அடிநிலைத் தொண்டர்களுக்கும் பங்கிடல்! இந்தியாவிலேயே பெரிய கார்ப்பரேட் தொழில் அரசியல் கட்சி நடத்துவதுதான்! வங்கத்தில் நடப்பது 'மமதா மாடல்' தமிழ்நாட்டில் நடப்பது 'திராவிட மாடல்'! பெயர்தான் வித்தியாசம்.

காந்திதான் அரங்குக்குள் இருந்த அரசியலைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்தவர்! அவர் காலத்தில் காங்கிரசில் மாவட்டத்திற்கு வெறும் ஐநூறு, ஆயிரம் பேர் தான் இருப்பார்கள்! தொண்டும், சிறை புகலும், பொதுவாழ்வின் நோக்கமாக இருந்ததால், வெட்டித்தனமானவனுக்கெல்லாம் கட்சியில் என்ன வேலை?

இன்றைக்குக் கட்சிகளில் எழுபது, எண்பது இலட்சம் பேர் உறுப்பினராக இருப்பதற்குக் காரணம், கட்சி ஒரு 'தொழிலாகி' விட்டதுதான்! இதைத் தொழிலாக்கியது கருணாநிதி! மனம் தடித்தவர்கள் அரசியலுக்குள் நுழைகின்ற காலம் தொடங்கியது!

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size