Versuchen GOLD - Frei
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கருணாநிதி பிறந்த நாள் விழா
Dinamani Dharmapuri
|June 04, 2025
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
-
தருமபுரி, ஒசூர், ஜூன் 3:
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.மணி தலைமை வகித்து மு.கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் தடங்கம் பெ.சுப்ரமணி, நகர் செயலாளர் நாட்டான் மாது, பொருளாளர் தங்கமணி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதேபோல தருமபுரி உழவர் சந்தையில், காய்கறிகள் நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. பேருந்து நிலையம், ராஜகோபால் பூங்கா, காந்தி சிலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, பாளையம்புதூர், இண்டூர், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அரூர்
தருமபுரி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் அரூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் தலைமை வகித்தார்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் மு.கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அரூர் நகர் செயலர் முல்லை ரவி, மூத்த நிர்வாகிகள் எஸ்.ராஜேந்திரன், அ.சத்தியமூர்த்தி, சி.கிருஷ்ணகுமார், இரா.சித்தார்த்தன், சென்னகிருஷ்ணன், மோகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே.செளந்தரராசு, சி.தென்னரசு, எஸ்.சரவணன், தலைமை பேச்சாளர் ப.செந்தாமரைக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒசூர்
Diese Geschichte stammt aus der June 04, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
ஹைதராபாத் டூஃபான்ஸ் அதிரடி வெற்றி
ஹாக்கி இந்தியா லீக் ஆடவர் தொடரில் ஹைதராபாத் டூஃபான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி இந்தியா ஜிசி அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.
1 min
January 21, 2026
Dinamani Dharmapuri
ஏஓ ஓஸாகா, ரைபகினா, சின்னர், சிட்சிபாஸ் முன்னேற்றம்; மொன்பில்ஸ் ஓய்வு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் முன்னணி வீரர் இத்தாலியின் ஜேக் சின்னர், சிட்சிபாஸ் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ரைபகினா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
January 21, 2026
Dinamani Dharmapuri
கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி: லடாக், ஐடிபிபி அணிகள் அபாரம்
லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min
January 21, 2026
Dinamani Dharmapuri
பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு
பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
1 mins
January 21, 2026
Dinamani Dharmapuri
பாமக பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை கோரி ராமதாஸ் தரப்பு மனு
பாமகவின் பெயர், கட்சிக்கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி அல்லது வேறு யாரும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பொதுச் செயலர் முரளி சங்கர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min
January 20, 2026
Dinamani Dharmapuri
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.
1 min
January 20, 2026
Dinamani Dharmapuri
வங்கதேசம்: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல
இடைக்கால அரசு அறிக்கை
2 mins
January 20, 2026
Dinamani Dharmapuri
சமூக ஒற்றுமையின் விதைகள்!
இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
2 mins
January 20, 2026
Dinamani Dharmapuri
108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18.07 லட்சம் பேர் பயன்
அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.07 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
1 min
January 19, 2026
Dinamani Dharmapuri
தொழிலாளர் நலன் காப்போம்!
உழைப்பு மனித நாகரிகத்தின் அடித்தளம்.
3 mins
January 19, 2026
Translate
Change font size

