Facebook Pixel இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும் | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்

Dinamani Dharmapuri

|

May 17, 2025

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில் முக்கிய திருப்பமாக இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டிரம்ப் சமூக ஊடகங்களுக்கு தெரிவித்தார். நான்கு நாட்கள் தொடர்ந்த பதற்றமான போர் எல்லை தாண்டிய மோதலுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது. முழுமையாக மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. பாகிஸ்தானுக்குப் பலத்த பின்னடைவு.

ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர். சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் அதை மீறியது. தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டது. பொறுப்பற்ற தனத்தையும், தனிப்பட்ட துவேஷத்தையும் இந்தியா மீதான அதிருப்தியையும் பாகிஸ்தான் வெளிப்படுத்தியது கண்கூடாகத் தெரிந்த உண்மையாகும்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.

ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்குள் வான்வழித் தாக்குதலை நடத்தியது இந்தியா. அதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் வான்வழிச் சண்டைகள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களின் மீது ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. பாகிஸ்தானும் இந்தியாவின் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்ததை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா.

வாஷிங்டனில் இருந்து மே 9- இல் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம்முனீருடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசியது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் பல்வேறு சர்வதேச நாடுகளின் பங்கு பற்றி நிறைய ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பயிற்சியாளர் மட்டுமல்ல...

சைப்ரஸில் நடைபெற்ற பிடே மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி அண்மையில் படைத்துள்ளார்.

time to read

1 mins

April 26, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் அனுபவங்களைப் பயன்படுத்த புதிய அமைப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை

time to read

1 min

April 26, 2026

Dinamani Dharmapuri

உலகை இணைக்கும் நடனம்

பாலே என்பது கலைநயமிக்க நடன வடிவமாகும்.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Dharmapuri

சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு மே 9-இல் மகாபிஷேகம்

சிதம்பரம் கோயிலில் ஸ்ரீநடராஜருக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வரும் மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Dharmapuri

11 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வேலூர், ஈரோடு உள்ளிட்ட 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகப் பதிவானது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Dharmapuri

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூர்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கட்சி மாறிய 7 எம்.பி.க்கள்: தகுதி நீக்கம் கோர ஆம் ஆத்மி முடிவு

ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம். பி. க்கள் 7 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி அந்த அவையின் தலைவருக்குக் கடிதம் எழுதவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவருமான சஞ்சய் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

April 26, 2026

Dinamani Dharmapuri

பெண் கொலை புரிந்த நன்னன்

சங்கப் பனுவல்கள் மிகவும் சிறப்பான படைப்பு மொழியைக் கொண்டு விளங்குகின்றன.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Dharmapuri

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

time to read

2 mins

April 26, 2026

Dinamani Dharmapuri

தனிநபர் பயன்பாட்டுக்கு 4.5 லிட்டர் மது வைத்திருக்க அரசு விதிகளில் அனுமதி

தனிநபர் தனது சொந்த பயன்பாட்டுக்கு 4.5 லிட்டர் மது வைத்திருக்க தமிழக அரசின் விதிகள் அனுமதிப்பதாகக் கூறி, புதுச்சேரியிலிருந்து கொண்டு வரப்பட்ட 1 லிட்டர் 680 மி. லி. மதுபானம் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

April 26, 2026

Translate

Share

-
+

Change font size