Facebook Pixel மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்! | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மாநிலக் கல்வியை மேம்படுத்துவோம்!

Dinamani Dharmapuri

|

April 15, 2025

தமிழ்நாடு அரசின், மாநிலப் பாடத்திட்ட முறை வலிமையான கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும், வெற்றிகரமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தாலும் மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் குறுகிய காலத்தில் ஏறத்தாழ 6 மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

- மு. சிபிகுமரன்

மாநிலத்தின் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பது, பாதுகாப்பது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது என்ற தலையாய கடமையை மாநிலப் பாடத்திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கல்விப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரையில் தமிழ் மொழி, இலக்கிய வரலாறு, அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டு வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் இவற்றோடு உலகமொழியாகிய ஆங்கிலம் என நிறைவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

காலந்தோறும் பல்வேறு சீர்திருத்தங்களைப் பாடத்திட்டத்தில் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் அதிகபட்சமான நிதியை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. தமிழக அரசு பின்பற்றுகிற பாடத்திட்டம் அறிவியல் பூர்வமானதும் வரலாற்றுச் சிறப்புடையதும் ஆகும். அதன் காரணமாக, இந்திய நாட்டுக்கு தலைசிறந்த கல்வியாளர்களையும், விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சிப்பணி அதிகாரிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இவர்களுள் பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியிலும் கற்றவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பாகும். இவ்வாறு பயின்றவர்கள் இன்று தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வருகிறார்கள்.

கடந்த 8.08.2024 தரவுகளின்படி, தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற அரசே நடத்துகிற தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 37,592 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 8,329 ஆகும். தனியார் பள்ளிகள் 11,443 ஆகும். இதில் அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,168 ஆகும். அதே வேளையில், சிபிஎஸ்இ எனப்படுகிற மத்திய அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிற பள்ளிகள் தமிழ் நாட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 250 பள்ளிகளாகவும், 2015-ஆம் ஆண்டில் 580 பள்ளிகளாகவும், 2024 -ஆம் ஆண்டில் 1,617 பள்ளிகளாகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளே. எனவே, தமிழ்நாடு அரசு நடத்தும் மேல்நிலைப் பள்ளிகளில் சரிபாதி அளவாக வளர்ந்து நிற்கின்றன மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள். ஊரகப் பகுதிகளில் கூட மத்தியப் பாடத்திட்டப் பள்ளிகள் மீதான நாட்டம் அதிகரிப்பதைக் காண முடிகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பயர்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி

அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிபிஎஸ்இ

'12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எண்ம வழி மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை' என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத் தேர்தல்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

time to read

1 mins

April 30, 2026

Dinamani Dharmapuri

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

time to read

2 mins

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் அமைதியாக நடந்தது

தேர்தல் ஆணையம்

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியாவை வென்றது சீனா

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சபலென்காவை சாய்த்தார் பாப்டிஸ்ட்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா காலிறுதியில் தோல்வி கண்டார்.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை

தமிழக காங்கிரஸ் தலைவர்

time to read

1 min

April 30, 2026

Translate

Share

-
+

Change font size