Versuchen GOLD - Frei
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
Dinamani Cuddalore
|October 28, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் பல லட்சம் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திங்கள்கிழமை மாலை கோயில் கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிகழாண்டு கந்தசஷ்டி விழா கடந்த அக். 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தினமும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சுவாமி வைர கிரீடத்துடனும், தங்க அங்கியும் அணிந்து சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பின்னர், யாகசாலைக்கு காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அதையடுத்து சண்முக விலாசத்துக்கும், திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்துக்கும் சுவாமி எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப் பின்னர் மாலை 4.30 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்டார்.
முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக் கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு கடற்கரையை வந்தடைந்தார். அதன்பின் சூரசம்ஹார நிகழ்வு தொடங்கி நடைபெற்றது.
Diese Geschichte stammt aus der October 28, 2025-Ausgabe von Dinamani Cuddalore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Cuddalore
Dinamani Cuddalore
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
2 mins
October 30, 2025
Dinamani Cuddalore
டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Cuddalore
டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு
2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Cuddalore
அன்பின் வழியது உயிர்நிலை
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
2 mins
October 30, 2025
Dinamani Cuddalore
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Cuddalore
தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.
1 min
October 29, 2025
Dinamani Cuddalore
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Cuddalore
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Cuddalore
தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி
தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Cuddalore
லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை
லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
October 29, 2025
Listen
Translate
Change font size

