Versuchen GOLD - Frei
1973ல் பேசப்பட்ட பாலசந்தரின் பெண்ணிய படங்கள்
Dinakaran Trichy
|September 14, 2025
1965 ம் ஆண்டு 'நீர்க்குமிழி' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கைலாசம் பாலசந்தர் என்கிற கே. பாலசந்தர். தமிழ்த் திரை யுலகில் தனது புதுமையான படைப் புகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர். தற்போது மாபெரும் ஆளுமைகளாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இவரால் அறிமுகமானவர்கள்தான். தமிழ்த் திரை யுலகில் பல புதுமைகள், மாறுதல்கள், அறிமுகங்கள், தயாரிப்புகள், விருது கள் என கே. பாலசந்தரின் பங்களிப்பு நீண்டுகொண்டே போகும். தொடர்ந்து, 'நாணல்', 'மேஜர் சந்திரகாந்த்', 'பாமா விஜயம்', 'தாமரை நெஞ்சம்', 'எதிர்நீச்சல்' போன்ற படங்களை இயக்கினார். அந்த வகையில் 1973ம் அவர் இயக்கிய 'அரங் கேற்றம்'; 'சொல்லத்தான் நினைக்கிறன்' ஆகிய 2 படங்களை பற்றிய தொகுப்பு இது.
-
கே .பாலசந்தரின் 24வது படமான இதில் பிரமிளா, எஸ்.வி. சுப்பையா, சிவகுமார், சசிகுமார், கமல்ஹாசன், எம்.என். ராஜம், சுந்தரி பாய், செந்தாமரை, ஒரு விரல் கிருஷ்ணா ராவ், நீலு, ஜெயசித்ரா, ஜெயசுதா மற்றும் கேமியோ ரோலில் ஜெய்சங்கர், லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். கே. பாலசந்தரின் கலாகேந்திரா பிலிம்ஸ் சார்பில் செல்வராஜ், துரைசாமி, கோவிந்தராஜன் ஆகி யோர் இணைந்து தயாரித்தனர். பி.எஸ். லோகநாத் ஒளிப்பதிவு செய்து வி. குமார் இசையமைத்தார். எடிட்டிங் பணியை என்.ஆர்.கிட்டு மேற்கொண்டார். 1973ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி இப்படம் வெளியானது.
கிராமத்து அக்ரஹாரத்தில் வசித் துவரும் ஆச்சாரமான குடும்பம். அந்த குடும்பத் தலைவர் ராமு சாஸ்திரிகள் (எஸ்.வி.சுப்பையா) அவரது மனைவி விசாலம் (எம். என். ராஜம்) மற்றும் தனது 8 குழந் தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் அந்த கிராமத்தில் இருக்கும் கோவிலில் பூஜைகள் செய்து வருகிறார். தொழிலில் ராமு சாஸ் திரிகள் மிகவும் நேர்மையானவர். தனது மகள், மகன்களையும் ஆவ்வாரே கண்டிப்புடன் வளர்க்கி றார். எட்டணா காசு கிடைத்தால், அன்று அவர் குபேரன். ஆனால், ஒழுங்காக தர்ப்பணம் செய்யாதவ ரிடம் கோபித்துக்கொண்டு, அந்த எட்டணாவையும் திருப்பி கொடுத்து விடுகிற கண்டிப்புமிக்கவராக ராமு இருக்கிறார்.
ராமுவின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது. இதில் அவ ருக்கு மேலும் ஒரு சுமையாக அவ ரது தங்கை ஜானகி (சுந்தரி பாய்) கணவர் வீட்டில் பிரச்னையால் அண்ணன் வீட்டில் அவரது மகளுடன் வசித்து வருகிறார். பல இரவு வேளைகளில் அனைவரும் உணவின்றி உறங்க செல்கின்றனர். ராமு சாஸ்திரிகளின் மூத்த மகள் லலிதா (பிரமிளா) வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகிறாள். ஆனால் லலிதா வேலைக்கு செல்வ தில் ராமுவுக்கு விருப்பம் இல்லை. லலிதாவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் நடேசன் உடையார் (செந் தாமரை) மற்றும் அவரது மகன் தங்கவேல் (சிவகுமார்) இருவரிட மும் நல்ல நட்பு கிடைக்கிறது. தங்கவேலுக்கு, லலிதா மீது காதல் ஏற்படுகிறது, அதை அவளிடம் தெரி விக்கிறார். இந்த காதலை நடேசன் உடையார் தடுக்கிறார். இதனால் வீட்டை விட்டு செல்லும் தங்கவேலு ஒரு விபத்தில் உயிரிழந்துவிடுவ தாக செய்தி வருகிறது.
Diese Geschichte stammt aus der September 14, 2025-Ausgabe von Dinakaran Trichy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Trichy
Dinakaran Trichy
வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை
பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்
3 mins
June 17, 2026
Dinakaran Trichy
இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்
தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
சரக்கு வருமானமே போயிடும்... சஸ்பெண்ட ரத்து பண்ணுங்க...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோவுடன் வைரலாக்கப்பட்டது.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது
வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்
1 mins
June 17, 2026
Dinakaran Trichy
ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்
உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு
1 mins
June 17, 2026
Dinakaran Trichy
சுலோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு சுலோவாக்கியாவின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆப் தி வொயிட் டபுள் கிராஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் ராணுவ விமானத்தில் வந்தது
நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.
1 min
June 17, 2026
Dinakaran Trichy
மோசமான சூழ்நிலையில் தமிழகம்
லதா ரஜினிகாந்த் வேதனை
1 min
June 16, 2026
Translate
Change font size

