Versuchen GOLD - Frei

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா இரண்டாம் தாய் நாடு...

DINACHEITHI - NAGAI

|

May 23, 2025

தமிழர்கள் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது இந்திய ஒன்றிய அரசின் வழக்கமாக உள்ளது. அதே போன்றதொரு மனப்பான்மை நீதியின் குரலாக ஒலித்திருப்பது உலகத் தமிழ் நெஞ்சங்களையெல்லாம் உலுக்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 2018ம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது அவரது தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிட்டப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், "அகதிகள் முகாமிலேயே 3 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். என்னுடைய மனைவியும், குழந்தைகளும் இங்கேயே தங்கி உள்ளனர். தாய் நாடான இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, எனது தண்டனையை ரத்து செய்வதோடு, இந்தியாவிலேயே தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஏற்கெனவே இங்கு 140 கோடி மக்களுடன் போராடி வருகிறோம். உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு பலர் வந்து அகதியாகத் தங்கி வருகின்றனர். அனைவரும் வந்து தங்குவதற்கு இது தர்ம சத்திரம் கிடையாது.

உலக அகதிகள் அனைவரும் இங்கு வந்து தங்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளதா ? அனைத்து வெளி நாட்டினரையும் இங்கு தங்க வைக்க முடியாது. இங்கு அகதியாக வந்து தங்கியிருக்க உங்களுக்கு உரிமை கிடையாது. தண்டனைக் காலம் முடிந்ததும் இங்கு தங்கியிருக்க முடியாது. நீங்கள் வேறு நாட்டுக்குச் செல்லலாம்" என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தனர்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NAGAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NAGAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 mins

January 06, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

Translate

Share

-
+

Change font size