Versuchen GOLD - Frei
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்
DINACHEITHI - KOVAI
|May 22, 2025
"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.
-
வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று (மே 21) நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.
அவர் தனது வாதத்தின்போது, "வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, பொது நலனுக்காக தனிநபர்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 102 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சட்டம் குறித்து எங்களுக்கு (அரசுக்கு) கவலை இருந்தது. அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவால் விரிவான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. 25 வக்பு வாரியங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதற்கு முன் இப்படி ஒரு விவாதம் நடந்ததே இல்லை எனும் அளவுக்கு விவாதங்கள் நடத்தப்பட்டு பிறகு நாடாளுமன்றம் மசோதாவை நிறைவேற்றியது. 2013 வரை, ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் வக்பு உருவாக்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் எப்போதுமே ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும் என்று சட்டங்கள் கூறுகின்றன.
தற்போதைய சட்டம் வக்பு அல் - அவுலாதை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, வக்பு நிறுவனரின் குடும்பத்தைச் சேர்ந்த மகள்கள் உட்பட அனைத்து சந்ததியினரும் நிரந்தரமாக சொத்துகளை நிர்வகிக்க முடியும். இது ஒரு நல்ல விஷயம். தனி நபர்களுக்கும் வக்புகளுக்கும் இடையிலான எந்தவொரு தகராறும் தகுதிவாய்ந்த நடுவரால் தீர்ப்பளிக்கப்படும்" என தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "ஒரு குறிப்பிட்ட சொத்து அரசுக்கானதா, வக்புக்கானதா என்பதை முடிவு செய்யக் கூடியவராக உள்ள அதிகாரி ஓர் அரசு ஊழியர் என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்" என்ற வாதத்தை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசு நிலத்தின் மீது யாருக்கும் உரிமை இல்லை. முழு நாடும் நிலத்தின் உரிமையாளர். பொதுமக்களுக்காக அரசு நிலத்தை அறக்கட்டளையாக வைத்திருக்கிறது.
Diese Geschichte stammt aus der May 22, 2025-Ausgabe von DINACHEITHI - KOVAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்
ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
DINACHEITHI - KOVAI
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
January 08, 2026
DINACHEITHI - KOVAI
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
DINACHEITHI - KOVAI
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - KOVAI
வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்
இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
DINACHEITHI - KOVAI
வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்
டிரம்ப் அதிரடி அறிவிப்பு
1 min
January 04, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்
லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்
1 mins
January 04, 2026
DINACHEITHI - KOVAI
பழைய ஓய்வூதியத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
1 min
January 03, 2026
DINACHEITHI - KOVAI
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்
அதிகாரிகள் தகவல்
1 min
January 03, 2026
Translate
Change font size
