Versuchen GOLD - Frei
உலகைத் தாக்கும் சூப்பர் எல் நீனோ... தகிக்கும் தமிழகம்..!
Kungumam
|10-04-2026
சூப்பர் எல் நினோ... இப்படி தான் உலக வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டை குறிப்பிடுகின்றனர்.
இதில் சூப்பர் என்பது தீவிரம் என்பதைக் குறிக்கிறது.
அதாவது இந்த ஆண்டின் இறுதியில் தீவிரமான எல் நினோ நிகழ்வு வரவிருப்பதாகவும், இதனால் உலகெங்கிலும் உள்ள வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சநிலைக்குச் செல்லும் எனவும் எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து, 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தரிடம் பேசினோம்.
“பொதுவாக பசிபிக் பெருங்கடல்ல இருக்கக்கூடிய வெப்ப நிலையின் மாறுபாட்டைக் கணக்கிட்டு அந்த ஆண்டை எல் நினோவா, லா நினாவானு வகைப்படுத்துவாங்க.
அதாவது கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இயல்பைவிட கடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததுனா அது எல் நினோனு சொல்வாங்க.
லா நினா என்பது எல் நினோவுக்கு நேரெதிர். அதாவது கடல் வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருப்பது லா நினா.
கடந்த ஆறேழு ஆண்டுகள் எடுத்துக்கிட்டோம்னா, அதில் ஐந்து ஆண்டுகள் லா நினா ஆண்டுகளாகவே இருந்தன. இதனால், சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு இருந்தது.
இதற்கிடையே கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் ஒரு வலு குறைந்த எல் நினோ வந்தது. அதனால், 2024ம் ஆண்டு வெப்பநிலை அதிகமாக இருந்தது. வெப்ப அலைகளின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டது.
இப்போ, 2026ல் எல் நினோ உருவாக ஒரு சாதகமான சூழல் காணப்படுது. ஆனா, நாம் இப்போதைக்கு சமநிலையில்தான் இருக்கோம். அதாவது லா நினாவும் இல்ல. எல் நினோவும் இல்ல. நியூட்ரல் ஸ்டேஜ்ல இருக்கோம்.
இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதம் இந்த எல் நினோ உருவாக இருக்கு. ஆக, இது எல் நினோவை நோக்கி பயணிக்கிற காலம்னு சொல்லலாம்...” என்கிறவர், இதன் தாக்கம் பற்றிக் குறிப்பிட்டார்.
“இந்த முறை உருவாக இருப்பது சூப்பர் எல் நினோ. சூப்பர் எல் நினோ என்பது அதன் தீவிர தன்மையால் வகைப்படுத்தப்படுது. அதாவது 1997, 2015ல் எல்லாம் நமக்கு எல் நினோ வந்தது. அதன் தாக்கம் எல்லாம் ஓரளவுக்கே இருந்தது.
ஆனா, இப்ப உருவாக இருக்கும் எல் நினோ அதிதீவிரம் கொண்டது. அதனால் சூப்பர் எல் நினோனு சொல்றாங்க. 1982க்குப் பிறகு உருவாகிற ஒரு வலுவான சூப்பர் எல் நினோ இது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு வருது. இதன் தாக்கத்தை இந்த ஆண்டைவிட நாம் அடுத்த ஆண்டுதான் அதிகமாக உணர்வோம்.
Diese Geschichte stammt aus der 10-04-2026-Ausgabe von Kungumam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kungumam
Kungumam
ஹீரோயினா நடிச்சு ரிலீஸ் ஆகாத படங்கள் இருக்கு!
‘சொல்லாமலே’ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சங்கீதா. 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர். ஹோம்லி கேரக்டர் என்றால் இயக்குநர்களுக்கு இவர்தான் முதல் சாய்ஸாக இருந்தார்.
2 mins
01-05-2026
Kungumam
ஸ்போர்ட்ஸ் கதை...ஆனா, புதுக்கதை!
தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். நடித்துள்ள 'அங்கீகாரம்' ரிலீஸுக்கு ரெடி. விளையாட்டு வீரராக அவதாரம் எடுத்துள்ள கே.ஜே.ஆர்., உடலை வருத்தி கேரக்டருக்காக செய்த தியாகத்தை சினிமா உலகில் வியந்து பார்க்கிறார்கள்.
1 mins
01-05-2026
Kungumam
இது குப்பை பை அல்ல... ஃபேஷன் BAG
விலை : ரூ.142 லட்சம்!
2 mins
01-05-2026
Kungumam
ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் ஈட்டும் அக்கா, தம்பி..!
வெடித்தது ஈரான் போர்...பஞ்சாப்பில் விளைகிறது காஷ்மீர் குங்குமப்பூ...
2 mins
01-05-2026
Kungumam
தரமான குடிநீர்!
உலகிலேயே தரமான குடிநீரைக் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
1 min
01-05-2026
Kungumam
அசத்தும் பிளாஸ்டிக் வீடு!
பிளாஸ்டிக் பாட்டில்கள்தான் செங்கல்...
3 mins
01-05-2026
Kungumam
சைக்கிள்
சில வருடங்களாக சென்னையின் சாலைகளில் சைக்கிள் போக்கு அதிகரித்து இருக்கிறது. சைக்கிளை ஓட்டுபவர்களைத் தாண்டி, தங்களின் அன்றாட தேவைகளுக்காக சைக்கிளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
3 mins
01-05-2026
Kungumam
திமுகவின் இமாலய வெற்றியும் பாஜகவின் படுதோல்வியும்!
கடந்த வாரம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைந்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்களை மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.
4 mins
01-05-2026
Kungumam
வீராங்கனை
சஹானா வீட்டு திறந்தவெளி முற்றத்தில் நின்றபடி பார்த்தாலே பெருவுடையார் கோயிலின் பிரம்மாண்ட கோபுர உச்சி தெரியும்.
4 mins
01-05-2026
Kungumam
சதுரங்க மகாராணி!
உலக சதுரங்க விளையாட்டில் இந்திய இளைஞர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா தேஷ்முக், வைஷாலி என சதுரங்க ஜாம்பவான்களின் பட்டியல் நீள்கின்றது. இதில் ஆண்களுக்கு நிகராக பெண் வீராங்கனைகளும் சதுரங்க விளையாட்டில் கலக்கி வருகின்றனர். குறிப்பாக இந்திய இளம் வீராங்கனை வைசாலியைப் பற்றித்தான் சதுரங்க உலகில் ஹாட் டாக்.
1 mins
01-05-2026
Listen
Translate
Change font size

