Versuchen GOLD - Frei
மக்களுக்கு நல்லது செய்ய சாதி அவசியமில்லை!
Kungumam
|06-10-2023
‘பான் இந்திய சினிமாவாக வெற்றி பெற்ற ‘காந்தாரா’வில் அதிகம் அறியப்படாத கிராம மக்களின் வாழ்க்கையை சொல்லியிருந்தார்கள். அதுபோல் வட மாவட்டங்களின் அதிகம் சொல்லப்படாத வாழ்க்கையை ‘சீரன்’ படத்தில் சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் இது தமிழ் சினிமா சொல்ல மறந்த கதை...’’ உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் துரை கே.முருகன். இவர் பிரபல இயக்குநர் எம்.ராஜேஷிடம் சினிமா கற்றவர்.
‘சீரன்’...?
சிறப்பானவன். சீர்படுத்துபவன் என்று பொருள். இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை கிடையாது. என்னுடைய சொந்த மாவட்டம் திருவண்ணாமலை. அந்த மாவட்டத்துக்கு என நேட்ட்டிவிட்டி இருக்கிறது.
ஓர் உதவி இயக்குநராக பல கம்பெனிகளுக்கு கதை சொல்வற்காக பலமுறை அலைந்திருக்கிறேன். என்னுடைய முதல் படத்தை க்ரைம் த்ரில்லர் ஜானர்ல பண்ணலாம்னு கதை ரெடி பண்ணியிருந்தேன்.
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் அழகு கார்த்திக் மூலம் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக் அறிமுகம் கிடைச்சது. என்னுடைய கதையை சொல்லி முடிச்சதும், தயாரிப்பாளர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை சொல்லி ‘அதைப் பண்ணலாமா’னு கேட்டார்.
அவர் தனிப்பட்ட முறையில் பல சாதிய கொடுமைகளை சந்தித்ததாகச் சொன்னார். அவரும் எங்க கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது அந்த சந்திப்பில்தான் தெரிஞ்சது. அவர் சொன்ன ஒவ்வொரு சம்வங்களையும் என்னால் சுலபமா புரிஞ்சுக்க முடிஞ்சது, என்னுடைய தாத்தா ஊர்ல செல்வாக்கான மனிதராக வாழ்ந்தவர். அவர் முரண்பாடுகளின் மூட்டையாகவும் சாதிய வன்மத்தோடும் வாழ்ந்தவர்னு அறியாப் பருவத்துல எனக்கு புரியலை.
தயாரிப்பாளர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்லும்போதுதான் அதை முழுமையாக என்னால் புரிஞ்சுகொள்ள முடிஞ்சது. சொல்லப்போனால் அந்த மாதிரியான கொடுமைகளை செஞ்சவர்களில் என்னுடைய தாத்தாவும் ஒருவர் என்று நினைக்கும்போது எனக்கே என் மீது வெறுப்பு வந்துச்சு.
அந்த வகையில் இது பதிவு செய்யப்பட வேண்டிய கதையா தெரிஞ்சது. அது எந்த சாதிய குறியீடும் இல்லாமல் எல்லோருக்குமான படமாக வந்துள்ளது.
குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை ஊர் மக்கள் ஒதுக்கி வைக்கிறார்கள். அந்தக் குடும்பம் உலகமே வியக்குமளவுக்கு சாதனை படைக்கிறது. அந்தக் குடும்பத்தை ஊர் ஏற்றுக்கொண்டதா, இல்லையா என்பதை யதார்த்தமாக சொல்லியுள்ளேன்.
Diese Geschichte stammt aus der 06-10-2023-Ausgabe von Kungumam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
