Facebook Pixel செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் | Pothu Arivu Ulagam – education – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

Pothu Arivu Ulagam

|

June 2024

இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

எனினும், இந்த தொழில்நுட்பம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர், மனிதர்கள் தற்போது பார்த்து வரும் பல்வேறு பணிகளுக்கு இது ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஓர் மனிதனை போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் அனுமதிக்கிறது. மனிதனை போலவே ஓர் விஷயத்தை கணிப்பது மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, இவை தொடர்பான அதிக அளவிலான தகவல்களை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கலாம்.

கணினியை கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algorithms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.

அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது.

இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம். அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவுகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம்.

வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனத்தை செயற்கை நுண்ணறிவு அனுமதிக்கிறது. அத்துடன் போலி மதிப்பீடுகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

ChatGPT மற்றும் Snapchat's My AI

ChatGPT மற்றும் Snapchat's My AI இரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சக்தி வாய்ந்த பயன்பாடுகள் அல்லது செயலிகளாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு செயலிகளும் சமீபகாலமாக மிகுந்த கவனம் பெற்று வருகின்றன.

ChatGPT மற்றும் Snapchat's My AI 'ஜெனரேட்டிவ் ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைக்கு சிறந்த உதாரணங்களாக கூறப்படுகின்றன. அத்துடன் செயற்கை நுண்ணறிவானது, 'சாட்பாட்' எனப்படும் கணினி மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது எழுத்து வடிவ உரையாடல் வழியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறது.

WEITERE GESCHICHTEN VON Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2026

25-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய இரு நகரங்களில் பிப்ரவரி 6 முதல் 22 வரை 17 நாட்கள் நடைபெற்றது.

time to read

2 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் போர்

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும், அதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறி, இஸ்ரேல், அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து கடந்த ஆண்டு ஈரானைத் தாக்கின.

time to read

3 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

time to read

2 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

டி20 உலக கோப்பையை வென்ற இந்தியா

10-வது டி20 உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்றது. இதில் 20 நாடுகள் பங்கேற்றன.

time to read

2 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2026

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

time to read

1 min

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

70-வது பிலிம்பேர் விருதுகள்

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமா உள்ளிட்ட நான்கு தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்பேர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

time to read

1 mins

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

ஞானபீட விருது

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீடம், பிரபல கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான ஆர். வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

சாகித்ய அகாடமி விருது

மத்திய கலாசாரத் துறையின் கீழ் செயல்படும், இலக்கிய அமைப்பான, 'சாகித்ய அகாடமி' சார்பில், ஆண்டுதோறும் 24 மொழிகளில் வெளியாகும், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சன வகைகளில் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

time to read

1 min

April, 2025

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்

சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

time to read

1 mins

March, 2026

Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam

கிராமி விருதுகள்

இசையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருதாகும்.

time to read

2 mins

March, 2026

Translate

Share

-
+

Change font size