Versuchen GOLD - Frei
பிங்க களூ
Champak - Tamil
|February 2025
"நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று இன்ஸ்பெக்டர் மிஸ்ரா பெருமூச்சு விட்டார், அவர் வேலையிலிருந்து திரும்பிய பிறகு டைனிங் டேபிளில் அமர்ந்தார்.
"ஏன் இப்படி கவலைப்படுகிறீர்கள்?' அவன் மனைவி சுனிதா இரண்டு கோப்பை தேநீருடன் உள்ளே நுழைந்தாள்.
"எங்கள் வாட்ச்மேன் மகன் கேசவை நீ பார்த்திருக்கிறாயா?" இன்ஸ்பெக்டர் மிஸ்ரா கேட்டார்.
"ஆம், அவன் ஒரு அமைதியான பையன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான். கல்லூரியில் இது அவன் பட்டம் பெரும் ஆண்டு ஆயிற்றே?' சுனிதா கேட்டாள்.
"ஹ்ம்ம். ஏழைப் பையன் சிக்கலில் இருக்கிறான். அவன் அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் பணத்தை திருடியதாக அவனது கல்லூரி கூறுகிறது."
“என்ன!” சுனிதா பதறினாள்.
"ஆமாம், அவர்கள் வழக்குப் பதிவு செய்து ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளனர்," இன்ஸ்பெக்டர் மிஸ்ரா தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பழுப்பு நிற உறையை எடுத்து, சுனிதாவை நோக்கி டேபிளின் குறுக்கே நீட்டினார். "நேற்று வேறொரு மாணவர் எடுத்த புகைப்படங்கள் இவை."
சுனிதா புகைப்படங்களைப் பார்த்தாள். கேசவ் கல்லூரியின் அலுவலக அறையில் டிராயர்களை பிடித்து இழுப்பது போன்றிருந்தது. "என்னால் இதை நம்ப முடியவில்லை," என்று சுனிதா குழப்பத்துடன் கூறினாள். "கேசவ் அண்ணா, என்ன சொன்னாங்கப்பா?" 12 வயது தீரஜ் கேட்டான். அவன் அங்கேயே தன் பெற்றோரின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"அவர் நிரபராதி என்றும் நேற்று அலுவலக அறைக்குள் செல்லவில்லை என்றும் கூறினான். ஆனால் இந்த புகைப்பட ஆதாரம் வேறுவிதமாக கூறுகிறது," என்று இன்ஸ்பெக்டர் மிஸ்ரா பதிலளித்தார்.
"கேசவ் அண்ணா திருடி இருக்கமாட்டார்'' என்று நம்பிக்கையுடன் கூறினான் தீரஜ்.
"எப்படி என்றால், கேசவ் அண்ணா ஒருமுறை மாம்பழம் திருடிய தீரஜை பிடித்து அவனுக்கு அறிவுரை வழங்கி, இதை யாரிடமும் சொல்லவும் இல்லை" என்று உள்ளே நுழைந்த அவனுடைய அக்கா தியா சிரித்துக்கொண்டே தன் தம்பியை மகிழ்ச்சியோடு மாட்டி விட்டாள்.
"தியா, உன்னால் எப்படி இப்படி பேச முடிகிறது!" தீரஜ் ஆத்திரமடைந்தான். "அந்த மாம்பழங்களில் சில உன்னிடமும் இருந்தது, இல்லையா? மாம்பழம் வேண்டும் என்று கேட்டதே நீதான்." "நான்..." தியா தயங்கி, தகுந்த விளக்கம் தர முயன்றாள். "ஆமாம், நீ மரத்தில் ஏறும் அளவுக்கு தைரியமாக இருக்கிறாயா என்று சோதிக்க விரும்பினேன்."

Diese Geschichte stammt aus der February 2025-Ausgabe von Champak - Tamil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Champak - Tamil
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Translate
Change font size
