தப்பட்

Thozhi|May 16, 2020

தப்பட்
ஒரு அறையில் என்ன இருக்கிறது? அதற்கு விவாகரத்துவரை போக வேண்டுமா என்ற கேள்விக்கு..? அந்த ஒரு அறையில் தான் பெண்களின் சுயமரியாதையே இருக்கிறது எனச் சொல்லி மனைவிகளை கை நீட்டி அடிக்கும் கணவன்களின் கன்னத்தில் ஓங்கி விழுந்த அறைதான் ‘தப்பட்'.
மகேஸ்வரி நாகராஜன்

படம் பெண்களின் எல்லா நிலையில் இருந்தும் அவர்களின் உணர்வுகளை வலிமையோடு வெளிப்படுத்தி இருப்பதுடன், படத்தின் வசனங்கள் அத்தனையும் பொட்டில் அறைந்தார் போல் நச்சென்று இருக்கிறது. மனைவி அம்ருதாவாக டாப்சி படத்திற்கு சிறப்புச் சேர்த்திருக்கிறார். தன் உணர்வுகளை உளவியலாய் முகத்தில் வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழும் அம்ரிதாவின் அம்மா. தன் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை இருந்தாலும் மருமகளைத் தனது மகள் போல் பார்த்துக் கொள்ளும் மாமியார். தினமும் கணவனின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அம்ரிதா வீட்டு வேலைக்காரப் பெண், கணவனை இழந்த பிறகு யாரையும் ஏற்க விரும்பாமல் துணிச்சலோடு வாழும் அம்ரிதாவின் பக்கத்து வீட்டுப் பெண், முதலில் கணவனுக்கு அடங்கி, பிறகு பொதுப் புத்தியிலிருந்து விடுபட்டு, தனக்கு சரியெனப் பட்டதைச் செய்யும் அம்ரிதாவின் வழக்கறிஞர், அம்ரிதா எடுக்கும் முடிவு சரியெனத் துணை நிற்கும் தம்பியின் காதலி என்று எல்லா அடுக் குகளிலும் பெண்களின் நிலையையும், அவர்க ளின் உணர்வுகளையும் வெளிக்காட்டி படத்தை இயக்குநர் நகர்த்தி இருப்பது சிறப்பு.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 16, 2020