உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவை பின்தள்ளிய சீனா; வல்லரசாக உயர்வு
Tamil Mirror|October 27, 2020
உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவை பின்தள்ளிய சீனா; வல்லரசாக உயர்வு
உலகப் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல், உலக மக்களின் நாளாந்த செயற்பாடுகளை மாற்றியமைத்து வருகின்றது.
ச.சேகர்

இவ்வாறான மாற்றங்கள் தொடர்பில் நாம், தினசரி அறிந்து வரும் நிலையில், பொருளாதார ரீதியில் உலக வல்லரசாக அறியப்பட்ட அமெரிக்காவைப் பின்தள்ளி, அந்த நிலையைச் சீனா தனதாக்கியுள்ளது. இந்தத் தகவலை, சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார உற்பத்தி 2020 அறிக்கை'யின் ஊடாக, அறிய முடிந்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம், அமெரிக்காவைப் பின்தள்ளி, உலகின் மாபெரும் பொருளாதார வல்லரசாக சீனா தோற்றம் பெற்றுள்ளது.

ஆம்! நீங்கள் மேலே வாசித்ததை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஏனெனில், சர்வதேச நாணய நிதியத்தின் நம்பத்தகுந்ததும் பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகோலானதுமான, 'கொள்முதல் வலு சரிநிகர்' (Purchasing Power Parity -PPP) என்பதன் பிரகாரம், சீனாவின் பொருளாதாரம் 24.2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் பெறுமதி 20.8 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் பயன்படுத்தப்படும் 'கொள்முதல் வலு சரிநிகர்' கணிப்பீட்டின் ஊடாக, நீங்கள் கொண்டிருக்கும் பணத்தினூடாக, வெவ்வேறு நாடுகளில் எந்தளவு கொள்முதல்களை மேற்கொள்ள முடியும் என்பது உணர்த்தப்படுகின்றது.

பாரம்பரியமாக, மொத்த தேசிய உற்பத்தியைக் கணிப்பீடு செய்வதற்கு, சந்தைப் பரிமாற்ற வீத (MER market exchange rates) முறையைப் பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்திய போதிலும், அந்த முறையால், அசல் பெறுமதிகள் பிரதிபலிக்கப்படுவதில்லை என, சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தைப் பரிமாற்ற வீத முறை, அதிகளவு சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. ஏனெனில், பல நாடுகளின் நாணயங்களின் கொள்முதல் வலுவை, இது குறைத்துக் காண்பிக்கின்றது. இதன் காரணமாக, டொலர் பெறுமதியுடன் பல நாடுகள் ஒப்பிடப்படும் போது, குறைந்த பெறுமதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தன.

கொள்முதல் வலு சரிநிகர் சீராக்கத்துடன், சீனாவின் பொருளாதார விளைவை, அமெரிக்காவின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், பாரியளவு வித்தியாசத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதாக, சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 27, 2020

MORE STORIES FROM TAMIL MIRRORView All