CATEGORIES
Categories

இன்று மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: தொடரைக் கைப்பற்றுவது யார்?
இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது ஹம்பாந்தோட்டையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

தலைக்கவசம் அணியாமல் செல்வோரை ‘வாட்ஸ்ஆப்’ மூலம் அவதானித்து சட்ட நடவடிக்கை
மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரை புகைப்படம் எடுத்து 'வாட்ஸ்ஆப்' குழுமத்தில் பதிவேற்றுவதன் மூலம், வீதி போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமூக செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக டீ சில்வா (வடமேற்கு) தெரிவித்தார்.

டயானா விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எம்.பியாக இருக்க தகுதியற்றவர் என்று அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு குறித்த தீர்ப்பை ஜூலை 25ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (06) ஒத்திவைத்தது.

தங்கத்துடன் சிக்கிய எம்.பியின் மீது ஏன் சட்டம் பாயவில்லை?
விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கம் மற்றும் பொருட்களுடன் அண்மையில் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் அமலாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) கேள்வி எழுப்பினார்.

25 வருடங்கள் ஆட்சியில் அமர்த்தி ஜனநாயகத்தை சீர்குலைக்க மக்கள் தயாராக இல்லை
2048ஆம் ஆண்டில், ஜனாதிபதிக்கு 99 வயதாகும் போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலைக்கு வரும் வரையில் அவருக்கு இன்னும் 25 வருடங்களுக்கு ஆட்சியில் இருப்பதற்கு இடமளித்து, இந்த நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க மக்கள் தயாராக இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் தெரிவித்தார்.

சுமந்திரன் எம்.பி சமர்ப்பித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல
உயர்நீதிமன்றம் வியாக்கியானம்

பல்கலைக்கழகங்களை கட்டியெழுப்ப முடியாது
பல்கலைக்கழக கட்டமைப்பினுள் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு பல்கலைக்கழக கட்டமைப்பையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையை எட்டும் என்று தெரிவித்தார்.

வெள்ளத்தில் சிக்குண்ட சா/த பரீட்சார்த்திகளை கரைசேர்த்த கடற்படை
புளத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல இலங்கை கடற்படை உதவியுள்ளது.

சர்வதேசத்திடம் நீதிகோரிச் செல்வோரை துப்பாக்கி கொண்டு அச்சுறுத்துகிறீர்கள்
சிறீதரன் எம்.பி தெரிவிப்பு அமைச்சர் அலிசப்ரிக்கும் பதிலடி

முத்திரை வெளியிட்டது வெட்கக் கேடானது
முகவரி இல்லாத சமூகத்துக்கு பல வருடங்கள் தலைவராக இருந்தவரை கௌரவிப்பதற்காக முத்திரை வெளியிடுமளவுக்கு இந்தப் பாராளுமன்றம் இருக்கின்றது என்றும், இது வெட்கக் கேடானது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நீச்சல் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள்
கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், ஆரம்ப நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

500 குழந்தைகளை ரஷ்யா கொன்றுள்ளது
உக்ரேன் மீதான போரில் ரஷ்யா குறைந்தது 500 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மறைக்கும் எண்ணம் ஒடிசா அரசுக்கு இல்லை
பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எந்த எண்ணமும் ஒடிசா அரசுக்கு இல்லை என்றும், மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்தன என்றும் ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்பானிய குரான் பிறி: வென்றார் வெர்ஸ்டப்பன்
ஸ்பானிய குரான் பிறீயானது ஸ்பெய்னின் பார்சிலோனாவில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.

செல்டா விகோவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்
ஸ்பானிய லா லிகா தொடர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு ஆபத்து
உலகம் முழுவதும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்ப வளர்ச்சி அபாயங்கள் குறித்து, கூகுள் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி எரிக் ஷ்மிட் எச்சரித்துள்ளார்.

“நாட்டுக்காக உழைக்கின்றோம்; எங்களது ரோட்டுக்கு பஸ் தா”
புரட்டொப்ட் பகுதிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை, தங்களுடைய பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுத்துமாறு கோரி, புரட்டொப்ட், ரஸ்புரூக், பூச்சிகொடை, மேரியல், அயரி, மேமலை கட்டுக்குத்துல, காச்சாமலை, சமகிபுர,டெல்ட்டா போன்ற தோட்டப்பகுதிகளில் தொழிலாளர் பணி நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பாரிய கண்டன ஆர்ப்பாட்ட பேரணியையும் முன்னெடுத்தனர்.

பொன் சிவகுமாரனுக்கு அஞ்சலி
தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை (05) உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆளுநர் செந்தில் விடுத்த அதிரடி உத்தரவு
கிழக்கில் மணல் அகழ்வு குறித்து

‘சீலை’ உடைக்காவிடின் இன்று உண்ணாவிரதம்
சீல் வைக்கப்பட்டு இழுத்துப் பூட்டப்பட்டிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி கிளையை இன்று (06) திறக்காவிடின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்தக் காரியாலயத்தின் தொடர்பாடல் அதிகாரி குமுதி வித்தான தெரிவித்துள்ளார்.

இலங்கை வருகிறது 'கார்டிலியா குருஸ்'
இலங்கைக்கான இந்தியாவின் சர்வதேச பயணிகள் கப்பல் சேவை, இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக வங்கியின் நிதியில் மருந்து கொள்வனவு செய்யத் தீர்மானம்
நாடளாவிய ரீதியில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு, உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திலினிக்கு சுகவீனம்: மருத்துவ அறிக்கை கோரியது நீதிமன்றம்
வாகனம் வழங்குவதாக உறுதியளித்து நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாயை முறைகேடாகப் பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே, திங்கட்கிழமை (05) உத்தரவிட்டார்.

மகளிர் அணி தலைவிக்கு 7 வரை விளக்கமறியல்
முன்னணியின் தமிழ் தேசிய மக்கள் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம், திங்கட்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.

கலந்துரையாடலுக்கு 3 நாள்கள் ஒதுக்கப்பட்டன
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

'தனியன்' சொல்வதில் ஆச்சரியமில்லை
ஜனாதிபதிக்கு சஜித் சவால்

‘சினோபெக்' வந்ததும் கோட்டா நீங்கும்
சீனாவின் 'சினோபெக்' நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் கோட்டா முறைமையை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளதுடன், எந்தவகையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

மொட்டுடன் இருப்பதே எங்களைத் தடுக்கிறது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தவறான நபர்களுடன் இணைந்திருப்பது முக்கிய பிரச்சினை என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் அவர் இருப்பதே, எங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

3 நாட்களில் நகர்ந்த குழந்தை
பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.

டயலொக் திறந்த கோல்ப் சம்பியன்ஷிப்: சம்பியனான டிவேடி
டயலொக் திறந்த கோல்ப் சம்பியன்ஷிப்பில் இந்தியாவின் டிவேடி சமரத் சம்பியனானார்.