ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனப் படைகள் முழுமையாகப் பின்வாங்கின

Dinamani Chennai|July 09, 2020

ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனப் படைகள் முழுமையாகப் பின்வாங்கின
கிழக்கு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில்ருந்து சீனப் படைகள் புதன்கிழமை முழுமையாக வாபஸ் பெறப்பட்டன. மற்ற இடங்களில் இருந்தும் சீனப் படைகள் தொடர்ந்து பின்வாங்கி வருகின்றன. படைகள் வாபஸ் பெறப்பட்ட பகுதிகளில் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் கூட்டாக ஆய்வு நடத்தினர்.

புது தில்லி, ஜூலை 8:

கிழக்கு லடாக் எல்லையில் சில இடங்களில் அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பும் அங்கு படைகளை குவித்தன. சீன தரப்பு ஏற்படுத்திய கண்காணிப்புமையத்தை இந்திய ராணுவம் அப் புறப்படுத்தியது. இதையடுத்து, ராணுவ வீர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புத் தடிகளைக் கொண்டு நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரர்கள் பலியானதாக கூறப்பட்டாலும், அதனை அந்நாடு உறுதி செய்யவில்லை.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 09, 2020