புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது

Dinamani Chennai|May 29, 2020

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, மே 28: ரயில் அல்லது பேருந்து மூலமாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்கான பயணக் கட்டணத்தை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாநிலங்கள் வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொழிலாளர்கள் பலர் நடந்தே சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்றனர். இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கௌல், எம். ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து 4 மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து போக்குவரத்து வசதிகள் முடங்கியதன் காரணமாக லட்சக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றி வந்த மாநிலங்களிலேயே சிக்கிக் கொண்டனர்.

அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளும் கிடைக்கவில்லை. அதனால், நடந்தே சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டிய பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 29, 2020