மக்காச்சோளத்தில் படைப்புழு (ஸ்போடோப்டிரா புருஜிபர்ட்டா) மேலாண்மை முறைகள்
Agri Doctor|September 19, 2020
மக்காச்சோளத்தில் படைப்புழு (ஸ்போடோப்டிரா புருஜிபர்ட்டா) மேலாண்மை முறைகள்
நடப்பு மாதத்தில் பரவலாக பெய்த மழையினைக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே மானாவாரியாக மக்காச் சோளம் விதைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருங் கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு படைப் புழுத் தாக்குதலிலிருந்து மக்காச்சோளப் பயிரினை காப்பாற்றி அதிக மகசூல் பெற்றிடுமாறு ச.உத்தண்டராமன், வேளாண்மை இணை இயக்குநர் கேட்டு கொண்டார்.

விருதுநகர், செப். 18

1. கோடை உழவு செய்வதன் மூலம் படைப்புழுவின் கூட்டுப் புழு பருவங்கள் வெளிக்கொணரப்பட்டு, பறவைகளுக்கு இரையாகின்றன. கடைசி உழவின் போது, ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவும். அவ்வாறு இடுவதால் கூட்டுப்புழுக்கள் பாதிப்புக்கு உள்ளாகி அந்திப்பூச்சிகளாக வெளி வருவது தடுக்கப்படுகிறது.

2. ஒட்டு ரக விதைகள் பூஞ்சாணகொல்லிகளோடு ஏற் கெனவே விதை நேர்த்தி செய்யப்பட்டிருந்தாலும் அல்லது செய்யப்படமால் இருந்தாலும் பிவேரியாபேசியானா பூஞ்சாண கொல்லி (அல்லது) தையாமீத் தாக்ஸம் 30 குளு பூச்சிக்கொல்லியினை ஓரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவும். இவ்வாறு செய் வதால் விதைத்த 25 நாட்களுக்கு மக்காச்சோள பயிருக்கு ஆரம்ப நிலை பாதுகாப்பு படைப்புழுக்களிட மிருந்து கிடைக்கின்றது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 19, 2020

MORE STORIES FROM AGRI DOCTORView All