يحاول ذهب - حر
ஒரு பில்லியன் டொலர் நட்டஈடு வழங்க உத்தரவு
July 25, 2025
|Virakesari Daily
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு; குற்றவியல் விசாரணைகளுக்கும் பணிப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், தீ பரவலுக்கு உள்ளான விவகாரத்தில் சம்பவத்தை தடுக்கத் தவறியமை மற்றும் தமது பொறுப்புகளை மறந்து செயற்பட்டமை ஊடாக அப்போதைய விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அப்போதைய தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர, சட்டமா அதிபர் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அத்துடன் குறித்த கப்பலில் தீ பரவியமை ஊடாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்காக, குறித்த கப்பல் கம்பனி ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை நட்ட ஈடாக செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த நட்ட ஈட்டுத் தொகை திறைசேரி செயலாளருக்கு கொடுக்கப்படல் வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
அத்துடன் இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அனைவருக்கு எதிராகவும் சி.ஐ.டி. ஊடாக குற்றவியல் விசாரணை செய்து வழக்குத் தொடுக்குமாறும் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்குக் கட்டளையிட்டது. இதனைவிட இந்தச் சம்பவத்தில் உள்ள சில விடயங்களை மையப்படுத்தி விசாரணை ஒன்றை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், தீ பரவலுக்கு உள்ளான விவகாரத்தில் பொறுப்புக் கூற வேண்டிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சட்டமா அதிபர் உட்பட மூவர் அடிப்படை உரிமைகளை மீறியதாக அறிவிப்பு
அனைத்து தரப்பினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதம் இழப்பீட்டை பெற்றுத் தருமாறு கோரியும் தாக்கல் செய் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் அதன் தீர்ப்பு நேற்று அறி விக்கப்பட்டது.
யப்பட்ட பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு 361 பக்கங் களைக் கொண்ட இந்த தீர்ப்பை ஏகமன தான தீர்ப்பாக அறிவித்தது.
هذه القصة من طبعة July 25, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
