يحاول ذهب - حر
அவசரகாலச் சட்டம் சட்ட விரோதமானது
July 24, 2025
|Virakesari Daily
அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் ரணில்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
‘அரகலய’ எனும் பெயரால் அறியப்பட்ட மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 2022 ஜூலை 17ஆம் திகதி 2288/30ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக பிறப்பிக்கப்பட்ட அவசரகால விதிமுறைகள் தன்னிச்சையானவை என்றும் அவை சட்ட விரோதமானவை எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவசரகால சட்டத்தை அமுல் செய்ததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் இதன்போது நீதிமன்றம் தீர்மானித்தது. ஜனாதிபதிக்குப் பதிலாக சட்டமா அதிபர்,
அப்போதைய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், அதன் பின்னர் ஜனாதிபதி செயலரான சமன் ஏக்கநாயக்க, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, அப்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகள் களாக பெயரிட்டு தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் தீர்ப்பை அறிவித்தே உயர் நீதிமன்றம் மேற்படி விடயத்தை அறிவித்தது.
நீதியரசர் பிரதம முர்து பெர்னாண்டோவின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்த 66 பக்க தீர்ப்பை அறிவித்தார்.
எவ்வாறாயினும் 26 பக்கங்களை உடைய தீர்ப்பொன்றினை எழுதியுள்ள வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதியரசர் குழாமின் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, குறித்த அவசரகால சட்டம் சட்டவிரோதமானது அல்லவென தீர்ப்பறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்மானத்தின் படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் அமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையான 'சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள், அவர்கள் சட்டத்தினால் சமமாக பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள்' என்ற நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தீர்ப்பறிவிக்கப் பட்டது.
கடந்த 2022 ஜூலை 17ஆம் திகதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு 5 மனுக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
هذه القصة من طبعة July 24, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
