يحاول ذهب - حر
மாதவிடாய் பற்றி பேசுவோம்
July 09, 2025
|Tamil Mirror
இலங்கையின் முன்னணி பெண்கள் சுகாதார தூய்மை வர்த்தக நாமங்களில் ஒன்றான Fems, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக 180 பாடசாலைகளில் 180,000இற்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடையும் வகையில் 'நாம் பேசலாம்', எனும் விரிவான மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான கல்வித் திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் United Communities ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளின் ஆதரவுடனும் இந்த முயற்சி அமுல்படுத்தப்படுகிறது.
Fems மற்றும் அதன் பங்காளர்களான இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் United Communities இடையேயான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025 ஜூலை 08 அன்று கைச்சாத்திடப்பட்டது.
அன்பும் ஆதரவும் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பான United Communities Guarantee Ltd மற்றும் மனித கஷ்டங்களை குறைக்கவும் அவர்களை வலுவூட்டி கண்ணியத்தை வளர்ப்பதற்கும் உறுதிபூண்ட மனிதாபிமான அமைப்பான இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுடனான இந்தப் புதிய இணைவு, Femsஇன் மாதவிடாய் சுகாதார கல்வி முயற்சிகளின் விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாடு தழுவிய திட்டத்தை ஆதரிப்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுடன் தொடர்புகளை எளிதாக்குவதில் இந்த அமைப்புகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இலங்கையில் மாதவிடாய் சுகாதாரக் கல்வி தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது.நாட்டில் மாதவிடாய் உள்ள 4.2 மில்லியன் பெண்களில், 30% ஆனோர் மட்டுமே தொடர்ந்து மாதவிடாய் தூய்மை அணையாடைகளைப் பயன்படுத்துகின்றனர். பாடசாலைகளில் மாதவிடாய் சுகாதார முகாமைத்துவம் குறித்து WaterAid மற்றும் தெற்காசியாவிற்கான யுனிசெஃப் பிராந்திய அலுவலகம் நடத்திய ஆய்வின்படி, இலங்கையில் 60% பெற்றோர்கள் தங்கள் மகள்களை மாதவிடாய் காலத்தில் பாடசாலைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.
هذه القصة من طبعة July 09, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

