يحاول ذهب - حر
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
October 12, 2025
|Dinamani Virudhunagar
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?
பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?
இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.هذه القصة من طبعة October 12, 2025 من Dinamani Virudhunagar.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.
1 min
June 16, 2026
Dinamani Virudhunagar
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி
ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு
2 mins
June 16, 2026
Dinamani Virudhunagar
பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞர் கைது
1 mins
June 16, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 18% அதிகரிப்பு
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து, கடந்த 6 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக 4,520 கோடி டாலரை எட்டியுள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Virudhunagar
அகல் சுடரும் அறப்பயணமும்...
வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.
3 mins
June 16, 2026
Dinamani Virudhunagar
கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு
ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.
1 min
June 16, 2026
Dinamani Virudhunagar
உலகக் கோப்பை வில்வித்தை; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி
துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.
1 min
June 15, 2026
Dinamani Virudhunagar
மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.
1 min
June 15, 2026
Dinamani Virudhunagar
ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Virudhunagar
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 15, 2026
Translate
Change font size

