يحاول ذهب - حر
வணிகப்போர் வளையத்தில் இந்தியா!
April 17, 2025
|Dinamani Virudhunagar
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் டொனால்டு டிரம்ப், உலகமே தனது ஆளுகைக்கு கீழ் வந்து விட்டதுபோல செயல்படத் தொடங்கிவிட்டார். மற்ற நாடுகளைத் தமது அடிமை நாடுகளைப் போல கருதிக் கொண்டு பேசுவதும், செயல்படுவதும் அவரின் அன்றாடச் செயல்களாகிவிட்டன.
அரசாட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும் வரி விதிக்காமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், வரியை அளவோடு விதிக்க வேண்டும். தேன் அடையிலிருந்து தேன் எடுப்பதுபோல மக்களைத் துன்புறுத்தாமல் வரி விதித்து ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் தமிழ்ப்புலவர்கள் மன்னர்களுக்கு அறிவுறுத்தினர்.
வேலொடு நின்றான் இடுஎன்றதுபோலும் கோலொடு நின்றான் இரவு (குறள் 552)
அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருள் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், எல்லாவற்றையும் தா என்று கேட்பதைப் போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அரசியல் நெறிவாழ்வார் எவ்வாறு குடிமக்களிடம் வரி கேட்டு வாங்க வேண்டும் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. காய்ந்து முற்றிய நெல்லை அறுத்து கவளம் கவளமாக யானைக்கு உண்ணக் கொடுத்தால் 'மா' அளவுள்ள சிறிய நிலத்தில் விளைவதும் பல நாளைக்கு உணவாகும். அவ்வாறின்றி, 100 வயல் அளவுள்ள பெரிய நிலமாயினும், யானை தானே வயலுக்குள் புகுந்து உண்டால் வாய்க்குள் போவதை விட அதன் கால்களில் பாழாவதே மிகுதியாகும். இவ்வாறு, காய்நெல் அறுத்து கவளம் கொளினே' என புறநானூற்றுப் பாடலில் கூறப்படுகிறது. மக்கள் நலம் நாடும் அரசுகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஏழை, பாட்டாளி மக்கள் இதனால் மிகப்பெரும் துயரங்களை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி ஆட்சி செய்வோர் கவலைப்படுவதில்லை. அதிகாரம் செய்யும் கார்ப்பரேட்டுகளும் கவலைப்படுவதில்லை.
பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கின. 1990-களின் பிற்பகுதியில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததாகக் கூறப்பட்டது.
எப்போதும் ஆண்டுக்கு இரண்டு சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் இப்போது சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகள், உலகமயமாக்கலால் பயனடைந்த உலக நாடுகளுக்கு ஏமாற்றமாகவும், பின்னடைவாகவும் அமைந்துள்ளன.
هذه القصة من طبعة April 17, 2025 من Dinamani Virudhunagar.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Virudhunagar
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Virudhunagar
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Virudhunagar
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Virudhunagar
அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
'வேறுபாடுகளைக்கடந்து கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
கிராண்ட் பிரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 தங்கம்
செக் குடியரசில் நடைபெற்ற 56-ஆவது கிராண்ட் பிரீ உஸ்தி நாட் லேபம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களைக் கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Virudhunagar
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Translate
Change font size
