يحاول ذهب - حر
அரசாணையால் ஆபத்து!
May 08, 2026
|Dinamani Tiruvallur
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
அது ஆங்கிலத்தில் சுருக்கமாக 'ஹாக்கா' (HACA) என்று அழைக்கப்படுகிறது.மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் அரசாணை எண் 44-இல் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 'மேற்குத் தொடர்ச்சி மலை கவலையளிக்கும் அளவுக்குச் சீரழிந்து வருகிறது. இதற்குக் காரணம் 'வளர்ச்சி' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் பொருளாதார, சமூக மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு, மெல்லிய சுற்றுச்சூழலையுடைய மலைப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் இயற்கை வளங்களை எடுத்துப் பயன்படுத்துகின்றன. இதனால், மலைப் பகுதிகள் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சேதமடைகின்றன. இதைத் தடுக்கும் விதமாக மலைப் பகுதிகளில் பல கட்டுப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகளை வழிமுறைப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் இந்த ஆணையம் உருவாக்கப்படுகிறது' என்று அந்த அரசாணை கூறுகிறது.
மலைப் பகுதி என்பது மலைகளை மட்டும் உள்ளடக்கியது அன்று; மலையடிவாரங்களில் உள்ள கிராமங்களையும் உள்ளடக்கியது. அந்தப் பகுதிகளில் வேளாண்மைக்காக நிலங்களைச் செதுக்குதல், வீட்டு மனைகள் உண்டாக்குதல், கனிம வளங்கள் எடுத்தல், சுற்றுலாத் திட்டங்கள் திட்டமிடுதல், அணைகள் கட்டுதல், மின்சாரம் தயாரித்தல், சாலை, ரயில் பாதைகள் அமைத்தல் போன்ற பல பணிகளுக்கும் மலைப் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
2011-இல் மேற்குத் தொடர்ச்சி மலை மிக வேகமாக அழிந்து கொண்டிருந்த காரணத்தால் அப்போதைய மத்திய அரசு, சுற்றுச்சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமங்கள் எடுப்பதற்கும், அணைகள் கட்டுவதற்கும், சுற்றுலாவுக்கும் எல்லாவிதக் கட்டுமானங்களுக்கும் மொத்தமாக தடை விதித்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.
குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலை செல்கிறது. கர்நாடகமும், கேரளமும், மகாராஷ்டிரமும் காட்கில் அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தன. மத்திய அரசும் காட்கில் அறிக்கையை ஏற்கவில்லை. அந்த அறிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அரசு அமைத்த குழுவின் அறிக்கையை அந்த அரசே ஏற்கவில்லை!
هذه القصة من طبعة May 08, 2026 من Dinamani Tiruvallur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
ஆண்டர்ஸை வெறியேற்றினார் கெளகஃப்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவை புதன்கிழமை வீழ்த்தினார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruvallur
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Tiruvallur
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Listen
Translate
Change font size
