يحاول ذهب - حر
நாயைக் கொல்லாத புலி!
July 01, 2025
|Dinamani Tiruvallur
விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.
சில நாள்களுக்கு முன்பு கேரளம் - தமிழ்நாடு எல்லையில், இடுக்கியில் உள்ள ஒரு ஏலக்காய் தோட்டத்தில், ஓர் ஆழமான குழியில் ஒரு புலியும் நாயும் விழுந்து கிடந்தன. பல மணிநேரம் கழித்துதான் வனத் துறையினர் வந்து அவற்றை மீட்டனர். நாயை வெளியில் விட்டபிறகு, புலியைப் பெரியார் புலிகள் காப்பகத்தில் கொண்டுவிட்டனர். இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் வந்து பலரது கவனத்தை ஈர்த்தது.
அவ்விரண்டு விலங்குகளும் வெகுநேரம் ஒரே குழியில் ஒன்றாகக்கிடந்திருக்கின்றன. இருந்தும், நாயை அந்தப் புலி கொன்று சாப்பிடவில்லை! பொதுவாக சிறுத்தை தான் நாயை வேட்டையாடி உண்ணுமே தவிர, நாயை புலி வேட்டையாடாது. ஏனெனில், நாய் புலியின் இயற்கையான இரை ஆகாது. மான், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளே புலியின் இயற்கையான இரையாகும். இரண்டு விலங்குகளுமே உயிர் பயத்தில் இருந்த போது, தப்புவது ஒன்றுதான் அவற்றின் தலையாய கவலையாய் இருந்திருக்குமேயன்றி, உணவைப் பற்றிய கவலை அப்போது இருந்திருக்காது.
விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. அதுவும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டே கொல்கின்றன. அந்தப் புலிக்குப் பசி வந்திருக்கலாம்; இருந்தாலும், தன்னுடன் சிக்கிக்கொண்டு, உயிர் பயத்துடன் இருந்த அந்த நாயின் மீது கருணை கொண்டு, அதை ஒன்றும் செய்யாமல்விட்டது. அந்த நாயும் புலியின் கருணையை உணர்ந்து செவ்வனே இருந்தது. ஐந்தாம் அறிவைத் தாண்டி அவை இரண்டும் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றனவோ எனத் தோன்றுகிறது!
மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. ஆனால், வயிற்றுப் பசி, உடற்பசி, கோபம், ஆணவம், பழிவாங்குதல் என்று ஏதேதோ காரணங்களுக்காகக் கொலை, கொள்ளை போன்ற மகாபாதகச் செயல்களைச் செய்கின்றார்களே! தம் ஆறாம் அறிவைக் கொண்டு இத்தகைய துர்க்குணங்களை விட்டொழிப்பதை விட்டுவிட்டு, இயற்கையின் நியதிக்கு மாறான, எண்ணிப் பார்க்கவும் அஞ்சத்தக்க கொடிய செயல்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களே!
هذه القصة من طبعة July 01, 2025 من Dinamani Tiruvallur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஆந்திரம்: எண்ணெய் கிடங்கில் தீ விபத்து
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) வாயு கசிவால் தீப்பற்றியதால் அதைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஆட்சியில் பங்கு சாத்தியம்
ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Tiruvallur
அஸ்ஸாமில் நிலநடுக்கம்: 3 பேர் காயம்; பல வீடுகள் சேதம்
அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று பேர் காயமடைந்தனர்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்
முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Translate
Change font size
