‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!’
April 25, 2025
|Dinamani Tiruvallur
கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்
-
வாஷிங்டன் / கீவ், ஏப். 24: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இது போன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் போர் விவகாரத்தில் ரஷியாவை டிரம்ப் இவ்வளவு காட்டமாக விமர்சிப்பது மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கீவ் நகரில் ரஷியா நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. தேவையே இல்லாத இந்தத் தாக்குதல், அமைதி முயற்சிகள் நடைபெறும் இந்த நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது தவறான செயல்.
விளாதிமீர் புதின் அவர்களே, இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்துங்கள். ஒவ்வொரு வாரமும் 5,000 வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். அதை நிறுத்தி, உக்ரைனுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ளுங்கள் என்று தனது பதிவில் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கீவ் நகரிலுள்ள ஒரு குடியிருப்புக் கட்டடமொன்றில் ரஷியா புதன்கிழமை நள்ளிரவு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்தக் கட்டடம் உருக்குலைந்தது. இதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 90 பேர் காயமடைந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
هذه القصة من طبعة April 25, 2025 من Dinamani Tiruvallur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஆவணங்களைத் திருத்தி மோசடி: ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்
ஆவணங்களைத் திருத்தி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
தஞ்சை தமிழ்ப் பல்கலை. இணையதளத்தில் எம்.ஜி.ஆர். பெயரை பதிவேற்ற வேண்டும்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
இலங்கை சுற்றுலா விளம்பரத்தில் ராமர் பாலம்
மன்னார் எல்லை சாலையில் வரவேற்புப் பலகை
1 mins
January 03, 2026
Dinamani Tiruvallur
முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், தவெகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Tiruvallur
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1,383 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த பலத்த மழையால் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டது.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
உ.பி.: ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ஷியாம் பிகாரி லால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Translate
Change font size
