يحاول ذهب - حر
கற்கத் தடம் அறிவோம்!
June 02, 2025
|Dinamani Thoothukudi
கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனால், கலந்தாய்வு வரை காத்திருக்க பயம்; தங்களுக்குப் பிடித்தமான தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை வாங்கி விடுகிறார்கள். அந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கலந்தாய்வில் நல்ல கல்லூரி கிடைக்கும் என்று எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்காமல் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறத் துடிக்கிறார்கள்.
-
பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தமிழ்நாடு அரசு, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபெரும் கோடைக்காலப் பயிற்சியை நடத்தியது.
நிகழ்வில் 'உயர் கல்வியில் புதிய வாய்ப்புகளும், அரசின் திட்டங்களும்' என்ற தலைப்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. திக்குத்தெரியாமல் தவிக்கும் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த தெளிவைப் பெறவேண்டும். இவர்களில் கிராமப்புற மாணவர்கள் தகுந்த வழிகாட்டுதல் இன்றி தவித்துப்போகிறார்கள். 'என்ன படிக்கலாம்?' என்ற வழிகாட்டு நிகழ்ச்சிகள் அவர்களுக்காக நடத்தப்படுகின்றன.
கல்லூரிகள், அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு வழிகாட்டின. யூ-டியூப் சேனல்களில் கல்வியாளர்கள் பேசுகிறார்கள். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுவது எப்படி?, அவர்கள் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் என்ன என்பது குறித்தும், மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், கல்வி உதவித்தொகை பெறும் முறைகள் என்று பல பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் 14417 என்ற தகவல் மைய எண் அறிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கட்டணம், உதவித் தொகை போன்றவை குறித்து வழிகாட்டுதல் பெறலாம். இது பள்ளிக் கல்வித் துறையின் சிறந்த முன்னெடுப்பாகும்.
நகர்ப்புறத்தில் உள்ள படித்த பெற்றோர் கல்லூரியின் உள்கட்டமைப்பு, கல்லூரியின் தரம், வேலைவாய்ப்பு, மாநில அளவில் கல்லூரியின் ரேங்கிங் ஆகிய பலவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் வாரிசுகளை சேர்க்கிறார்கள். பெண்கள் என்றால் விடுதிப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறார்கள்.
هذه القصة من طبعة June 02, 2025 من Dinamani Thoothukudi.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Dinamani Thoothukudi
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா
பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Thoothukudi
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Translate
Change font size

