يحاول ذهب - حر
மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
June 17, 2025
|Dinamani Salem
நிவாரண முகாம்கள் அருகே தொடரும் துப்பாக்கிச்சூடு
-
டேய்ர் அல்-பாலா, ஜூன் 16: காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 34 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: காஸா முழுவதும் திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் ராஃபா நகரில் 33 பேரும் மத்திய காஸாவில் ஒருவரும் அடங்குவர் என்று அமைச்சகம் கூறியது.
அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிவாரணப் பொருள் விநியோக மையங்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்தின் நிவாரண மையங்களுக்கும் செல்லும் வழியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் போலவே இவற்றையும் இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், இந்தத் தகவலை இஸ்ரேல் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுமதித்ததில் இருந்தே அந்தப் பொருள்களை வாங்க முகாம்களை நோக்கி வருவோர் மீது இஸ்ரேல் படையினர் தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். ஆனால், ஒரே நாளில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
هذه القصة من طبعة June 17, 2025 من Dinamani Salem.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Salem
Dinamani Salem
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Salem
அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனர்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி உள்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெக-வில் சனிக்கிழமை இணைந்தனர்.
1 mins
June 14, 2026
Dinamani Salem
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Salem
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பார்க்கிறது
கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தவெக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
June 14, 2026
Dinamani Salem
அமேசானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவில் பிரபல இணையவழி வர்த்தக தளமான அமேஸான் மூலம் நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Salem
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Salem
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 பேர் கைது
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 14 நாள்களில் 4,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
June 14, 2026
Dinamani Salem
இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 6.75% அதிகரிப்பு
இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த மே மாதத்தில் 6.7 சதவீதம் உயர்ந்து, 13.39 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Salem
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Salem
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Translate
Change font size

